Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பேப்பர் ராக்கெட் (வெப் சீரிஸ் விமர்சனம்)

வெப் சீரிஸ் : பேப்பர் ராக்கெட்

நடிப்பு: காளிதாஸ், தான்யா, ரேணுகா, கருணாகரன், நிர்மல் பழசி, கவுரி ஜி.கிருஷ்ணன், தீரஜ், நாகி நீடு, சின்னி ஜெயந்த், காளிவெங்கட், பூர்ணிமா, ஜி.எம்.குமார் அபிஷேக் சங்கர், பிரியதர் ஷினி, சுஜாதா

தயாரிப்பு: ஸ்ரீநிதி சாகர் (ரைஸ்ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்)

இசை: சைமன் கே குமார், வேத் சங்கர், தர்ஷன்(பாடல்கள்)

பின்னணி இசை: சைமன் கே கிங்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம். நாதன்

இயக்கம்: கிருத்திகா உதயநிதி

ரிகீஸ்: ஜீ5 ஒரிஜினல் (ZEE5 Original)

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

தாயின் கண்டிப்பால் தற்கொலை எண்ணம், தந்தையின் இழப்பு, தாய் மாமனால் மானபங்கம், கேன்சர் பாதிப்பு, காதல் தோல்வி, மன வலி என பல வகையில் பாதிக்கப்பட்ட சில இளைஞர் களும், பெண்களும் ஒன்றாக சந்தித்து தூரமாக பயணம் மேற்கொள்கின்றனர். தங்களது ஆசைகளை இந்த பயணத்தில் தீர்த்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். அவர்களின் ஆசைகள் எப்படி தீர்கின்றன. அதற்கு மற்றவர்கள் எப்படி உதவுகின் றனர். இந்த பயணம் இனிமையாக முடிந்ததா என்பதற்கு 7 தொடர் களில் ஒவ்வொரு தொடர் முடியும்போதும் பதில் கிடைக்கிறது.

ஏண்டா இன்னும் வாழ்கிறோம் என்ற விரக்தி மனப்பான் மைக்கு வந்துவிட்ட வரும், தற்கொலை செய்து கொள்வது தான் ஒரே வழி என முடிவெடுக்கும் நபர்களும் பேப்பர் ராக்கெட் தொடரை பார்த்தால் மீண்டும் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பிறந்து சிறந்ததொரு புதிய வாழ்க்கையை வாழ முடியும் என்பது உறுதி.

தற்கொலை செய்துகொள்வது என்று முடிவெடுத்த கருணாகரன் அதற்காக மலைபாங்கான ஒரு லொகேஷனை தேர்வு செய்ததும் தற்கொலை எண்ணத்தை கைவிடும்படி காளிதாஸ் உள்ளிட்ட சக நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் தற்கொலை செய்துகொள்ள மலை உச்சியில் நிற்கும்போது தொடரை பார்ப்பவர்கள் எப்படியாவது அவர் மனம் மாறிவிடமாட்டாரா என்ற பரிதவிப்புக்குள் ளாகின்றனர். இந்த காட்சியில்
நட்பும், பிறர் மீது காட்டும் அன்பும் வாழ்க்கையை வாழ பிடிமானம் ஏற்படுத்தும் என்ற மெசேஜ் பலருக்கும் பாசிடிவ் எண்ணங்களை உருவாக்கும்.

பிரைன் டியூமர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிர்மல் பழஸி தன் பள்ளி தோழியிடம் காதலை சொல்லாமல் சண்டை போட்டுபிரிந்துவிட எப்படியாவது அவளை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஏங்குவதும் அவளோ வேறு ஒருவரை மணந்து ஒரு குழந்தைக்கு தாய் ஆகிவிட்டதை அறிந்தபிறகும் மன்னிப்பு கேட்க தேடிச் செல்வதும் அதற்கு அப்பெண்ணின் கணவர் என்ன சொல்வாரோ என்ற தயக்கமும் காட்சியை சுவாரஸ்யமாக்கு கிறது.

குண்டான தோற்றத்தில் வரும் நிர்மல் தனது மாஜி காதலியை கண்டதும் குழந்தைபோல் மாறி துள்ளி குதிப்பது மகிழ்ச்சியை படரவிடுகிறது. மோகன்லா லின் ஸ்டைலை சில அசைவுகளில் காட்டி ஈர்க்கிறார்.

எல்லார் ஆசையையும் தீர்த்து வைக்கும் இளைஞராக காளிதாஸ் நடித்துள்ளார். தனது நிதானமான அதேசமயம் அழுத்தமான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார். அதேபோல் யாரைக்  கண்டாலும் சிடு சிடுவென கோபப்படும் தான்யாவும் தனது மனதில் படிந்த பாரத்தை தீர்க்க திருமண வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் தாய்மாமனை வார்த்தை சவுக்கால் விளாசுவது அருமை.

மூத்த நடிகை ரேணுகாவின் மனதில் உள்ள வலியை தீர்க்க காளிதாஸ் உதவும் காட்சியும் பின்னர் தனது மரணத்தை சோகம் காட்டாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடச் சொல்லி கடிதம் மூலம் தெரியப்படுத்தி இறப்பதும், “நான் இறந்தபிறகு உங்கள் மீது மழைத் துளியாய் விழுவேன் ” என்ற கவித்துமான வசனமும் மனதை நெகிழ வைக்கிறது.

தொடரில் நடித்திருக்கும் அத்தனை பேருமே தங்கள் பங்களிப்பை யதார்த்த மாக வெளிப்படுத்தியிருப்பது பிளஸ்.

ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் இத்தொடரை எழுதி இயக்கி உள்ளார் கிருத்திகா உதயநிதி. பெண் இயக்குனர் என்பதாலோ என்னவோ காட்சிகளில் தாய்மையின் பாசத்தையும் குழைத்து தந்திருக்கிறார்.

எழுத்தாலும் சொல்லாலும் பிறரை மனம் நோகச் செய்வது எளிது ஆனால் மகிழ்ச்சியையும், வாழ வேண்டும் என்ற நம்புக்கையையும் உண்டாக்குவது கடினம். அந்த கடினமான பணியை மிக இயல்பாக சொல்லி தரமான இயக்குனர் வரிசையில் இடம்பிடிக்கிறார் கிருத்திகா உதயநிதி.

சைமன் கே குமார், வேத் சங்கர், தர்ஷன் இசை இதயத்துக்கு இதமாக இசைந்து போகிறது.

மேகங்கள் வந்து முத்தமிடும் மலைப் பாங்கான பகுதிகளை சில்லிடும் உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதி வாளர் ரிச்சர்ட் எம் நாதன்.

இத்தொடர் ஜீ5 ஒரிஜனல் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பேப்பர் ராக்கெட் – ரணத்தால் கனமான இதயத்தை லேசாக்கும் அற்புத மருந்து.

Related posts

‘செவ்வாய்கிழமை’ படம் நவம்பர் 17 ரிலீஸ்

Jai Chandran

விஷால் ’சக்ரா’ டிரெய்லர் 5.4 மில்லியன் வியூஸ் கடந்தது..

Jai Chandran

Sony Pictures Films Joining Hands with Ulaga Nayagan Kamal Haasan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend