Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஒடிடியில் புதுபட வெளியிட டால் பணம் திரும்ப தரணும்.. படதயாரிப்பாளர்களிடம் விநியோஸ்தர்கள் திட்டவட்டம்

.

சென்னை செங்கல்பட்டு விநியோகஸ் தர்கள் சங்கதலைவர் டி.ராஜேந்தர் பங்கேற்ற திரைப்பட விநியோகஸ் தர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்ப்பட்டது.
தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் குழு கூட்டமைப்பின் சந்திப்பு ஜும் (Zoom) மூலமாக நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நிறைவேற் றப்பட்ட புதிய தீர்மானங்கள் பற்றிய விவரம் வருமாறு:
* ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால்தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால் தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிட முடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப் பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதை போலத்தான் நமது திரைப்பட தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது.
ஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தை ஒரு விநியோகஸ்தர் நேரடியாக வாங்கி வெளியிட வேண்டியது என்றாலும், இல்லை ஒரு  தயாரிப்பாளர் வெளியிடுவதற்கு உதவிகரமாக ஒரு விநியோகஸ்தர் இருப்பது என்றாலும் சரி, திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு தேவை. திரையுலகம் வாழ, திரையரங்குகள் வாழ, திரைப்பட விநியோகஸ்தகள் வாழ, முதலில் பக்க பலமாக, உறுதுணையாக விநியோ கஸ்தர்களாகிய நாங்கள் இருக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கும் போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை, ஒருவேளை துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்வியை தோளிலே தூக்கி சுமந்தவர்கள் எண்ணற்ற விநியோகஸ்தர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின் றோம்.
இன்றைக்கு வந்திருக்கலாம் O.T.T. தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். ஏற்கனவே திரையுலகம் நலிவடைந்து, சிதைந்து விட்டது. பத்தும் பத்தாததற்கு கொரோனா காலத்திலே திரையரங் குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது.
O.T.T. தளத்திலே நட்சத்திர அந்தஸ்த் துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்கு வார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர் களின் படங்களை வாங்குவார்களா?
தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் சில விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்த O.T.T. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிட கூடாது என்பதில் நாங்கள்
கவனமாக இருக்க விரும்புகின்றோம்.
இன்று வேண்டுமானால் கொரோனா வின் காரணமாக திரையரங்குகள் மூடப் பட்டு கிடக்கலாம். கடவுள் அருளால், காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும்.
*  தற்போது திரையரங்க நுழைவு கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவிகிதம் வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு (LBT) 8 சதவீகிதம் கேளிக்கை வரி செலுத்துவ தால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கூடுதல் சுமை யாக அமைகிறது. ஆகையால் மேற்படி 8 சதவிகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பது என் தீர்மானிக்கப்பட்டது.
* இனிவரும் காலங்களில் தயாரிப்பா ளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக விநியோகஸ்தர் களிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்த படத்தினை திரை யரங்குகளில் வெளியிடாமலும், விநியோகஸ்தர்கள் செலுத்திய தொகை யை திரும்ப அளிக்கமாலும், அப்படத்தி னை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத் தினை O.T.T. யில் திரையிடும் தயாரிப்பா ளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்ப பெற்று சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக் கை எடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது.
இந்த சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்க தலைவர்  டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித், சேலம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மோகன், திருச்சி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் ரவி, மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மணிகண்டன் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சோனி லைவில் தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்

Jai Chandran

கமல் கட்சி நிர்வாகி திடீர் நீக்கம்

Jai Chandran

நடிப்பதற்காக ஒரே நாளில் புல்லட் ஓட்ட கற்றுக்கொண்ட வனிதா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend