Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எறும்பு ( பட விமர்சனம்)

படம்: எறும்பு

நடிப்பு: சார்லி, எம்.எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள், ஜெகன்

தயாரிப்பு: மன்று ஜி வி எஸ்.

இசை: அருண்ராஜ்

ஒளிப்பதிவு: காளிதாஸ்

இயக்கம்: சுரேஷ்.ஜி

பி ஆர் ஓ: யுவராஜ்

விவசாயத்தை நம்பி வாழும் சிறிய கிராமத்தில் தனது இரண்டாவது மனைவி கமலம் (சூசன் ஜார்ஜ்) கைக்குழந்தை மற்றும் இறந்த முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகள் பச்சையம்மா (மோனிகா), முத்து (சக்தி ரித்விக்) மற்றும் வயதான தாயுடன் வசிக்கிறார் அண்ணாதுரை  (சார்லி). குடும்ப வறுமை காரண மாக ஆறுமுகத்திடம் (எம். எஸ்.பாஸ்கர்) வட்டிக்கு கடன் வாங்குகிறார். குறித்த நேரத்தில் கடனை திருப்பி தராததால் வீட்டுவாசலில் நின்று கத்தி சத்தம்போட்டு  அண்ணாதுரையின் மானத்தை வாங்குகிறார் ஆறுமுகம்.   அடுத்த சில நாட்களில் கடனை கட்டுவதாக அண்ணா துரை சொல்லி அனுப்பு கிறார். இந்நிலையில் வீட்டில் குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த  மோதிரத்தை முத்து தொலைத்து விடுகிறான். சித்தி திட்டுவார் என்று பயந்து அழும் முத்துவுக்கு அக்கா பச்சியம்மா ஆறுதல் சொல்கிறார். வேலைக்கு சென்றி ருக்கும் சித்தி வருவ தற்குள் சிறு சிரு வேலை செய்து பணம்சேர்த்து. மோதிரத்தை வாங்க முயல்கின்றனர். மோதிரம் வாங்கினார்களா? அண்ணாதுரை கடனை திருப்பி தர முடிந்ததா? என்பதற்கு கிளைமாக்ஸ் நெகிழ்வுடன் பதில் அளிக் கிறது.

மிகவும் எளிமையான கதை என்றாலும் நிறைய விஷயங்களை உள்ளடக் கிய கதை என்பது முக்கியம். கிராமத்தில் கடன் பட்ட குடும்பம்  அதை திருப்பி செளுத்தாவிட் டால் எப்படி அவமானத் துள்ளாகும் என்பதை எதார்த்தமாக சித்தரிக்கும் காட்சியில் சார்லி, எம்.எஸ் பாஸ்கர் தத்ரூபமாக நடித்திருக்கின்றனர். முறைப்புடன் பேசும் பாஸ்கர், அவரிடம் கொஞ்சியும் மிஞ்சியும் பேசும் சார்லி அவமானப் பட்டு நிற்கும் சூசன் குழந்தைகள் என அக்காட்சி கண்களுக்குள் பதிந்துவிடுகிறது.

மோதிரத்தை  தொலைத்து விட்டு பயந்து அழும் சிறுவன் சக்தி ரித்விக் அவனை தேற்றும் அக்கா மோனிகா பாத்திரங்களில் வாழ்ந்திருக்கின்றனர். சிறிக சிறுக பணம் சேர்க்க இருவரும் செய்யும் வேலைகள் அந்த பணத்தை சேர்த்து வைக்கும் அழகு எல்லாமே சென்டிமென்ட் டச். குறிப் பாக முயல் பிடித்து அதை விற்காமல் வளர்க்கும் குழந்தைத்தனம் அழகோ அழகு.

படத்தில் யாருக்கும் தெரியாமல் மனதை கொள்ளையடிக்கிறார் ஜார்ஜ் மரியம்.  சிட்டு என்ற பாத்திரத்தில் சிறுவர் களுடன் சிறுவராக பேசுவது, வேலை செய் யாத செல்போனில் மற்றவர்களுக்கு பேசுவது என அதகலப்படுத்து கிறார் . உண்டியல் திருடு போய்விட்டதாக சொல்லி அந்த பெண் முட்டை மீது சத்தியம் வாங்குவதும் திடீரென்று உண்டியலை சாமி சிலை முன்பிருந்து எடுத்து வந்து கொடுத்து “சாமிய நான் காபாத்திட் டேன்னு சொல்லியபடி மரியம் ஜார்ஜ் நடையை கட்டுவது அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

பரவை சுந்தராம்பாள், ஜெகன் கிராமத்து முகங்கள் கதைக்கு பலம்.

மன்று ஜி வி எஸ். நிறுவனம் தயாரித்திருக் கிறது.

அருண்ராஜ் மெல்லிய இசையால் மனதை வருடுக்கிரார்.

காளிதாஸ் ஒளிப்பதிவு கிராமத்து திண்ணையில் நம்மை அமரவைத்து விடுகிறது.

இது கதை அல்ல பல காட்சிகள் வாழ்வில் கண்ட,  அனுபவித்த  சம்பவங்களையே தொகுத்து திரையில் வடித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ்.ஜி.

சர்வதேச அளவில் சுற்றி வந்தால் விருதுகளை அள்ளிவருவதுடன்  மனங்களையும் வென்று வரும் என்பதில் சந்தேக மில்லை. விருதுக் குழுவினர் பார்த்தால் யாருக்கு விருது தருவ தென்று  முடிவெடிக்க முடியாமல் குழம்பி விடுவார்கள்.

எறும்பு – மனங்களை வென்றெடுக்கும் கரும்பு.

 

 

Related posts

குழலி படத்துக்கு இண்டோ பிரஞ்ச் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது

Jai Chandran

Miss India crosses 100 Million views in Hindi (Dubbed)

Jai Chandran

ஜாக்கி சானின் “வேன்கார்ட் ” டிசம்பர் 25ல் ரிலீஸ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend