Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சார்லஸ் எண்டர்பிரைசஸ் ( பட விமர்சனம்)

படம்: சார்லஸ் எண்டர்பிரைசஸ்

நடிப்பு: ஊர்வசி, கலையரசன், பாலு வர்கிஸ், குருசோமசுந்தரம்

தயாரிப்பு: டாக்டர் அஜித் ஜாய்

இசை: சுப்ரமணியம் கே. வி.

ஒளிப்பதிவு: சுவருப் ஃபிலிப்

இயக்கம்: சுபாஷ் லலிதா சுப்ரமணியம்

பி ஆர் ஒ: யுவராஜ்

கொச்சியில் கணவனை பிரிந்து வாழும்  ஊர்வசி தன் மகன் பாலுவுடன் வாழ்கிறார். தெய்வ பக்தி கொண்டவர் ஊர்வசி. பழமையான புராதன பொருட்கள் வைத்திருக் கிறார். அத்துடன்   சோழ மன்னன் தன் மூதாதைய ருக்கு அளித்த விநாயகர் சிலை ஒன்றும் வைத் திருக்கிறார். அதை ஊர்வசியின் மகன் திருடி விற்கும் எண்ணத்துடன்  ஒளித்து வைக்கிறார். சிலை திருடுபோனது பற்றி போலீசில் புகார் தரப்படுகிறது. போலீஸ் விசாரணையில் இறங்கு கிறது. இதன் முடிவு என்ன என்பதை  எதார்த்தமாக படம் சொல்கிறது.

பிரமாண்டம், அடிதடி, குத்துப்பாட்டு என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடைமுறை என்னவோ அதை மட்டுமே உள்ளடக்கி  சில மலை யாள படங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் படம்தான் இது.

முதல்பகுதி முழுவதும் மெல்லவே நகர்கிறது. சிலை திருடுபோனதும் அதுபற்றி விசாரிக்க வரும் போலீஸ் மேலோட்டமாக விசாரித்துவிட்டு எங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று  பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு செல்வது ஒரு சம்பிரதாய விசாரணையாகவே தெரிகிறது.

படபடவென பேசி கலகல வெனசிரிக்க வைக்கும் ஊர்வசியையே இதுவரை பார்த்துவிட்டு திடீரென்று அவர் வெறுமனே ஒரு அம்மாவாக வந்துபோவது எடுபடவில்லை. மகனாக நடித்திருக்கும் பாலு வர்கிஸ் திருட்டு முழிதான் கொஞ்சம் விறுவிறுப்பை சேர்க்கிறது.

கலையரசனுடன் சேர்ந்து விநாயகர் சிலையை விற்க முயல்போது எப்படியும் போலீசில் சிக்கி விவகாரமாகப்போகிறது என்று எதிர்பார்த்தால் அதுவும் புஸ்ஸாகிவிடு கிறது. படத்தில் மலை யாள வாடையடித்தாலும் நடிகர்கள் தமிழ் முகங் களாக இருப்பது ஆறுதல்.

விநாயகர்  திடீரென்று கார் டிரைவராக ஊர்வசி கண்ணுக்கு தெரியும் கிராபிக்ஸ்  நொடியில் வந்து மறையும் ஷாக். குரு சோமசுந்தரம் ஏற்கனவே எதார்த்தமாக நடிப்பவர் இதில் அவரது எதார்த்தம் சற்று தூக்கலாகவே இருக்கிறது.

டாக்டர் அஜித் ஜாய் தயாரித்திருக்கிறார்.

சுப்ரமணியம் கே. வி. ஓகே. சுவருப் ஃபிலிப் ஒளிப்பதிவு ஸ்பெஷல் இல்லை

சுபாஷ் லலிதா சுப்ரமணியம்  சிறுகதை யை டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இல்லாமல் எளிமையாக  படமாக்கி யிருக்கிறார்.

சார்லஸ் என்டர்பிரைசஸ் – வேகம் குறைவு.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

Related posts

Dhruv Vikram Starring Mari Selvaraj Directorial ‘Bison Kaalamaadan’

Jai Chandran

அசத்தல் நடனத்தில் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” வெப் தொடர்

Jai Chandran

STATE OF SIEGE: TEMPLE ATTACK’ ON 9TH JULY On ZEE5

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend