படம்:இ பி கோ 306
நடிப்பு: சீனு மோகன், சாய். தரரா பழனிவேல், கணேஷ் சுரேந்தர், சங்கீத், கமலேஷ், விஷ்ணு பிரகாஷ், . கணேஷ் சுரேந்தர், சாவித்ரி சிவகுமார்,
தயாரிப்பு: சாய் பிக்சர்ஸ் பி.சிவகுமார், ராம் சய் அரவிந்த்
இசை: சூரிய பிர்காஷ்,
ஒளிப்பதிவு: ஜோ சுரேஷ், செல்லப்பா
இயக்கம்: சாய்
ரிலீஸ்: எம் எக்ஸ் பிளேயர்
ஒரு கதையை தேர்வு செய்வ தற்கு முன் அது மக்களின் மனதை தொடுமா என்பது முக்கியம் இந்தக் கதை மக்களின் அடிமனம் வரை தொடும் என்பதை உணர்ந்தே தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் சாய்.
சிறுமயங்குடி என்ற கிராமத் தில் வசிக்கும் ஏழை மாணவி கோடீஸ்வரி தனது தாய் கேன்சர் நோயால் இறந்துவிட் டார் என்பதற்காக மற்றவர் களும் அதேபோல் பாதிக்காம லிருக்க தான் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறார். மாவட்டத்திலேயே முதல் மாணவியாக பள்ளியில் தேர்சி பெறுகிறார். ஆனால் டாக்ட ருக்கு படிக்க நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார். ஆனால் வழக்கு அரசுக்கு சாதகமாகி மாணவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆகிறது. மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள் கிறார். அவருக்கு நீதி கேட்டு மாணவ, மாணவிகள் போராட் டத்தில் குதிக்கின் றனர். இதன் முடிவு என்ன என்பதை உருக்க மாக சொல் கிறது படம்.
தூக்கிட்டு தற்கொலை என்ற அதிர்ச்சி காட்சியுடன் தொடங்குகிறது. எதற்காக இந்த தற்கொலை என்பதை வரிசையாக பின்கதை விவரிக்கிறது. ஒரு பக்கம் மீடியாக்கள் நீட் மாணவிக்காக குரல் கொடுக்க திடீரென்று அவர்கள் டி ஆர் பிக்காக வேறு சில விஷயங் களை செய்ய வேண்டி இருக் கிறது.
நீட் வேண்டாம் என்று வெளி யில் வேஷம் போடும் அரசியல்வாதிகள் நான்கு சுவருக்குள் அதை வைத்து கோடி கோடியாய் எப்படி சம்பாதிப்பது என்று திட்டம் போடுவதை தோலுரித்திருக் கிறார் இயக்குனர்.
கல்வி முறை மாற வேண்டும் சிபிஎஸ்சி படிக்கும் மாணவர்க ளுக்கு எளிதாக இருக்கும் நீட் தேர்வு மாநில கல்வி திட்டத் தில் பயிலும் மாணவர் களுக்கு எவ்வளவு கடினமானது என்பதையும் ஆணி அடித்தார் போல் சொல்கிறார் மாணவி யாக நடிக்கும் கோடீஸ்வரி. தாய்பாலில் விஷத்தை கலக்கும் சூழ்ச்சி என்று வரும் வசனம் நெஞ்சை பதற வைக் கிறது.
அரசியல்வதியாக வரும் சாய் பார்வையிலும் பேச்சிலும் சூழ்ச்சி நிறைந்திருக்கிறது. மாணவி கடைசியாக எழுதி வைத்த கடிதத்தை வைத்து
அரசியல் நடத்துவது பல அரசியல்வாதிகளின் முகமூடியை கிழிக்கிறது.
மாணவியின் தந்தையாக நடித்திருக்கும் சீனு மோகன் அந்த பாத்திரமாகவே மாறி இருக்கிறார்.
திருச்சிக்காரர்களின் இ பி கோ 306 படைப்பு அர்த்தத்துடன் கருத்து பேசி இருக்கிறது. இசையும், பின்னணி பாடல் களும் காட்சிகளோடு கரைந்திருக்கிறது.
நீட் தேர்வில் உள்ள குறை களையும் அது ஏழைகளுக்கு எட்டாக் கனி என்பதையும் இயக்குனர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதை எட்டும் கனியாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற தீர்வுதான் காணோம்.
தனது தற்கொலை மற்ற ஏழை மாணவர்களுக்கு ஒரு வழி ஏற்படுத்தி தரும் என்ற மாணவியின் எண்ணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவாக கிளை மாக்ஸ் விளக்குகிறது. இந்தியா முழுவதும் கல்வி முறையில் எல்லோருக்கும் சமசீராக இருப்பதுதான் இதற்கு தீர்வு என்பதை இன்னமும் அழுத்தமாக கூறி இருக்கலாம்.
ஒளிப்பதிவு காட்சிகளை மனதில் பதிய வைக்கிறது. அழுகை ஓலத்தில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
இ பி கோ 306 – நீட் ஒழிய தற்கொலை தீர்வில்லை என்பது படம் சொல்லும் பாடம்.