படம்: வல்லான்
நடிப்பு: சுந்தர் சி., தான்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி, சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி எஸ் கே
தயாரிப்பு: டாக்டர் விஆர் மணிகண்ட ராமன், வி காயத்ரி
இசை: சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவு: மணி பெருமாள்
இயக்கம்,: மணி சேயோன்
பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா
பிரபல தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். போலீசார் தீவிரமாக தேடியும் துப்பறிய முடியவில்லை. அந்த வேலையை போலீசில் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுந்தர் சியிடம் உயர் அதிகாரி ஒருவர் ரகசியமாக ஒப்படைக்கிறார். ஏற்கனவே தனது காதலி கொல்லப்பட்டதை எண்ணி சோகத்தில் இருக்கும் சுந்தர் சி இரண்டு சம்பவங்களில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதில் உண்மைகளை கண்டுபிடிக்கிறார் அது என்ன என்பது கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் ஆக நீடிக்கிறது.
மதகஜ ராஜா வெற்றி களிப்பில் இருக்கும் சுந்தர் சிக்கு அந்த வெற்றியின் தொடர்ச்சியாக இன்னொரு வெற்றியை எட்ட முடியுமா என்ற எண்ணத்தில் வெளியிடபட்ட படமாகவே வல்லான் தெரிகிறது. அந்த படம் முழுவதும் காமெடி இந்த படம் முழுவதும் கொலை சஸ்பென்ஸ்.
எனக்கு நடிப்பு வராது ஆக்சன் தான் வரும் என்று சொல்லும் விதமாக நடிப்பு பற்றி கவலைப்படாமல் ஆக்சன் காட்சிகளை மட்டும் அதிரடி காட்டி இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் எம்ஜிஆராவது மூன்று அடி வாங்கிவிட்டு திருப்பி தாக்குவார் ஆனால் சுந்தர் சி. ஸ்டான்ட் வீரர்களிடம் ஒரு அடி கூட வாங்காமல் அடித்துக்கொண்டே இருக்கிறார்.
காதலி கொலை செய்யப்பட்டாள் என்பதை அறிந்து அந்த ஒரு காட்சியில் அழுது நடிக்க முயற்சித்திருக்கிறார் சுந்தர் சி.
சுந்தர் சி யின் காதலியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். தான்யாவை பெண் பார்க்க வரும் சுந்தர் சி அவரை பிடித்திருந்தாலும் ஒரு காரணத்துக்காக திருமணம் செய்ய மறுப்பதும் அதேபோல் சுதர்ச்சியை தான்யாவுக்கு பிடித்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரை தான்யா மணக்க மறுப்பதும் சின்னதொரு சஸ்பென்ஸ்.
நடிகை ஆக வேண்டும் என்ற கனவில் ஹெபா பட்டேல் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். பாடல் காட்சிகள் ஓகே பின்னணி இசையில் கோட்டை விட்டு இருக்கிறார்
மணி பெருமாள் ஒளிப்பதிவு கிளியர்.
மணி சேயோன் ஒரு சஸ்பென்ஸ் கதையை தந்திருக்கிறார்.
வல்லான் – சண்டை பிரியர்களுக்கு.