Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிடிவி தினகரன் கட்சியுடன் விஜய காந்த் கட்சி கூட்டணி உறுதியானது..

விஜயகாந்த்தின் தேமுதிக அதிமுக vவுடன் கூட்டணி அமைத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டது. இம்முறை தொகுதி உடன்பாடு பற்றி இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது.
கடந்த 2 நாட்களாக டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் தேமுதிக பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. அதில் இன்று உடன்பாடு ஏற்பட்டது. தேமுதிகவுக்கு அமமுக 60 தொகுதிகள் ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து அமமுக, தேமுதிக கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

06.04.2021 அன்று நடைபெற வுள்ள தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப் பது என்று முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத் திற்கு தமிழ்நாட்டில் 60 சட்ட மன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த தோழமை உடன் பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவன், அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் செந் தமிழின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Related posts

Arun Vaidyanathan to direct and produce a film for children

Jai Chandran

Vijay Sethupathi’s ‘ACE’ Glimpse Released

Jai Chandran

”மாநாடு” திரைப்பட விழா மேடையில் சிம்பு கண்கலங்கியதால் பரபரப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend