Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

பெண்களுக்கு மாதம் தோறும் ரூ 1500 வழங்கும் திட்டம்.. அதிமுக தேர்தல் அறிக்கை..

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தலைவர்களின் பிரசாரம் அனல்பறக்க நடக்கிறது. நேற்று திமுக தலைவர் மு.க்.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பா ளருமான எடப்படி பழனிசாமி கட்சியின் தேர்தல் அறிகையை சென்னை தலைமை செயல கத்தில் இன்று வெளியிட்டார். அப்போது கட்சி ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உடனிருந்தார். தேர்தல் அறிக்கையை அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் வாசித்தார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* குடும்ப தலைவிக்கு குல விளக்கு திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ 1500 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
* அம்மா இல்லம் திட்டம் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும்.
* அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு அளிக்கப் படும்.
* பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடரும்.
* அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரு. 3.40 லட்சமாக உயர்த்தப்படும்.
* 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும்.
* நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப் படும்.
* காய்தே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.
* பெட்ரோம், டீசல் விலை குறைக்கப்படும்.
* பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப் படும்.
* எம்ஜிஆர் பசுமை ஆட்டோ திட்டத்தில் 25 ஆயிரம் மானியம் அளிக்கப்படும்.
* பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப் படும்
* ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்.
* எல்லா வீட்டிற்கும் ஆண்டிற்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
* அம்மா துணி துவைக்கும் இயந்திரம் வழங்கப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி இலவச டேட்டா.
*வீட்டில் ஒருவருக்கு அரசு பணி அளிக்கப்படும்.
* முதியோர் ஊதியம் 2000 அக உயர்த்தப்படும்.
* தமிழ் மொழிப்பாடம் பள்ளி களில் கட்டாயமாக்கப்படும்.
* ஈழ தமிழர்களுக்கு ஐ ந மூலம் நிரந்தர தீர்வு மேற் கொள்ளப்படும்.
* சாதி வாரி கணக்கெடுப்பின் படி அனைத்து சாதியினருக் கும் இட ஒதுக்கீடு..
இதுபோல் இன்னும் பல்வேறு வாக்குறுதிகள் அதிமுக  தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

டி வி. சீரியலில் களமிறங்கும் நடிகை சோனா !

Jai Chandran

ரெட்ரோ வெற்றி: சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசு

Jai Chandran

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 வது ஆண்டு பரிசளிப்பு விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend