மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் திருவுருவச் சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டது.
புரட்சிகர கருத்துக்களை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி ரசிகர்களை ஈர்த்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சிறந்த படங்களைக் கொடுத்துள்ளார். லாபம் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் முழு உருவ உலோக சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவு மலரும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கம்யூனிஸ்ட் கட்சியினர், நடிகர் விஜய் சேதுபதி, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.