படம்: அவதார்: தி வே ஆஃப் வாட்டர்
நடிப்பு: சாம் வொர்த்திங்டன், ஸோ சால்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லிட், சிகோனி விவர், கிளிப் கர்டிஸ், ஜோயல் டேவிட் முரே
தயாரிப்பு: ஜேம்ஸ் கேம்ரூன், ஜான் லேன்டு
இசை: சைமன் ப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு: ருஸெல் கார்பென்ட்டர்
இயக்கம்: ஜேம்ஸ் கேம்ரூன்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா (டி ஒன்), நாசர்
ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது அவதார்: தி வே ஆஃப் வாட்டர்.
உலக அழிவு விரைந்து வரும் நிலையில் வேற்று இடத்தில் தங்களது தலைமை இடத்தை அமைக்க எண்ணும் மனிதர்கள் வேற்றுலக காட்டுப்பகுதியில் வசிக்கும் அவதார் இன மக்களை வேட்டையாடி அந்த இடத்தை கைப்பற்ற எண்ணுகின்றனர். மனிதகுல ராணுவ வீரராக அவதார் இனத்தை அழிக்க சென்ற ஜாக் (சாம் வொர்த்திங்டன்) அங்கி ருக்கும் பெண்ணிடம் மனதை பறிகொடுத்து அவர்களுடனே வாழத் தொடங்குகிறான்.
அவதார் இனத்துக்காக மனித இனத்தினரை போரிட்டு விரட்டு கிறான். காலப்போக்கில் அவதார் இனமாக மாறிவிடும் ஜேக்கிற்கு 2 மகன்கள் ஒரு மகள் பிறக்கின் றனர். அவர்களுடன் ஸ்பைடர் (வில்லன் குவாரிட்ச் மகன்), வளர்ப்பு மகளும் வாழ்கின்றனர். இம்முறை அவதார் இனத்தையும் ஜேக் மற்றும் அவரது குடும்பத்தை யும் அழிக்க வில்லன் குவாரிட்ச் (ஸ்டீபன்) படை திரட்டிக் கொண்டு வருகின்றான். தன்னால் தனது அவதார் இனம் பலியாகக்கூடாது என்று எண்ணி காட்டில் வாழும் அவதார் இன மக்களை பிரிந்து பாண்டோராவில் வாழும் கடல் வாழ் இனத்தவரிடம் அடைக்கலம் கேட்கிறது ஜேக் குடும்பம். முதலில் தயங்கும் அவர்கள் உன்னால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டு தங்களுடன் தங்க அனுமதிக்கின் றனர். காட்டுப்பகுதியில் வாழ்ந்த ஜேக் குடும்பத்தினர் கடலில் வாழ பழகுகின்றனர். எல்லாம் நல்லவித மாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் வில்லன் குவாரிட்ச் ஜேக்கை தேடி பாண் டோரா கடல் வாழினத்தவர் பகுதிக்கு பெரும் படையுடன் வருகிறான். அவனுடன் கடல் வாழ் உயிரினமான ராட்சத திமிங்கலம் டுல்கூன்ஸை வேட்டையாடும் கூட்டமும் வருகிறது. டுல்கூன்ஸை கடல்வாழ் இனத்தவர்கள் தங்கள் குடும்பத்தினரைப்போல் பாவிப்ப தால் அவர்கள் டுல்கூன்ஸை அழிக்க வருபவர்களை எதிர்க்க துணிகின்றனர். குவாரிட்ச் படை, டுல்கூன் வேட்டையாளர்கள், அவதார் ஜேக் மற்றும் கடல் வாழ் இனத்தவர்களுக்கிடையே கடும் போர் நிகழ்கிறது. இதில் வெல்வது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் மூச்சு முட்ட பதில் அளிக்கிறது.
கற்பனைக்கு எட்டாத காட்சிகளை படமாக்குவதில் தன்னை மிஞ்ச இன்னொருவர் கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன்.
படம் தொடங்கிய உடனே கதையும் தொடங்கி விடுகிறது. ஹீரோ ஜேக்காக வரும் சாம் வொர்த்திங்டன் அவதார் மனிதனாகி 3 குழந்தைகளுக்கு தந்தையாகவும் மாறி பிள்ளை களை கண்டிப்புடனும் துணிச்ச லுடனும் வளர்ப்பதும் பிள்ளை களும் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் சக மனித இன வாழ்க்கை முறையை நேரில் காண்பதுபோன்ற உணர்வே மேலிடுகிறது.
வில்லன் குவாரிட்ச் படைகளுடன் தன்னை தாக்க வருவதையறிந்து ஜேக் தன் மனைவி பிள்ளை களுடன் அடைக்கலம் தேடி கடல் வாழ் இனத்தவரை அணுகுவதும் முதலில் அவர்கள் ஜேக்கை எதிரி யாக பாவித்து கோப்பப்படும்போது மோதல் வெடிக்கப்போகிறது என்ற பரபரப்பு எழுகிறது. ஆனால் அது சமாதானத்தில் முடிந்ததும் அடுத்துத்து வரும் கடல் நீர் காட்சிகள் கண்களை மட்டுமல்ல ஆளையே முழுவதுமாக கடலுக்கு அடியில் மூழ்கச் செய்கிறது. அடுத்த இரண்டரை மணி நேரம் கடலுக்குள் வாழ்ந்த உணர்வு படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படு கிறது.
நீரில் வேகமாக நீந்தும் டிராகன் களின் ஸ்பீட் ஆச்சர்யத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் டுல்கூன்ஸ் ராட்சத சுறாக்களின் அணிவகுப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மீண்டும் ஜூராசிக் பார்க் ராட்சத டைனஸர்களின் ஞாபகம் ஆக்ரமிக்கிறது.
ராட்சத டுல்கூன்ஸுடன் நட்பு பாராட்டும் ஜேக்கின் இளைய மகன் அதனுடன் பேசி அதன் உணர்வுகளை சைகை பாஷை மூலம் பரிமாறிக் கொள்வது வித்தியாசம்.

ஜேக்கின் மனைவியாக வரும் ஸோ சால்டனாவின் ஆக்ஷன் காட்சிகளும் பிள்ளைகள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் போது அவர்களை மீட்க கையில் வில்லுடன் போராடுவதும் வேகமோ வேகம்.
வில்லன் ஸ்டீபன் லாங் ஆஜான. பாகு தோற்றத்தில் மிரட்டுகிறார். ஹீரோ சாம், வில்லன் ஸ்டீபன் நேருக்கு நேர் மோதும் மோதல் இரண்டு அரக்கர்கள் மோதுவது போல் பயமுறுத்துகிறது.
இத்துடன் வில்லன் தீர்ந்தான் என்று பார்த்தால் இறுதியில் அவன் உயிர்பிழைப்பதால் அவதார் 3ம் பாகத்துக்கும் லீட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன்.
ஒவ்வொரு மோதல் காட்சியுமே ஒரு கிளைமாக்ஸ்போல் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக் கிறது. அதுவும் 3டி எபெஃக்ட்டில் காட்சிகளை பார்ப்பதற்கு நூறு கண்கள் வேண்டும்.
ருஸெல் கார்பென்டர் கேமிரா மாயாஜாலங்கள் புரிந்திருக்கிறது.
சைமன் ப்ராங்க்ளின் இசை பிரமாண்டத்தை கூட்டுகிறது.
டொவன்டியத் சென்சுரி ஸ்டுடியோஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
அவதார் தி வே ஆஃப் வாட்டர் – கடல் உலகில் மூழ்கிய ஜில் உணர்வு.

