சீனாவில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுக ளுக்கு பரவியது. கொரோனா பரவலை தடுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலை தடுப்ப தற்காக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. சுமார் 8 மாதங்கள் ஊரடங்கு நீடித்தது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை தொடங்கியது. கொரோனா பரவலும் குறைந் திருந்தது. இந்நிலையில் உருமாறிய கொரோனா புதியவடிவில் வேகமாக பரவ தொடங்கி இருப்பதாக கடந்த ஒரு மாத மாக தகவல் வெளி யாகி வருகின்றன. வெளிநாடு களில் இதன் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் இந்தியாவி லும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனா தடுப்பு ஊசியும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
ஒருபக்கம் தடுப்பு ஊசி போடப்பட்டாலும் மறுபக்கம் வைரஸ் தொற்றின் 2வது அலை பல நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக் கிறது. உலகம் முழுவதும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 12.38 கோடியை தாண்டி உள்ளது. அதாவது 12,38,50,904 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.
இதுவரை 9,97,78,463 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கின்றனர். . அதே சமயம் 27 லட்சத்து 27 ஆயிரத்து 428 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்திருக்கின்றனர்.
2 கோடியே13 லட்சத்து,45 ஆயிரத்து 013 பேர் சிகிச்சை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா வால் 3,05,21,765 பாதிக்கப்பட் டுள்ளனர். 5,55,314 பேர் உயிரிழந்துள் ளனர். 2,27,54,252 பேர் குணம் அடைந்திருக்கின் றனர்.
பிரேசில் நாட்டில் 1,19,98,233 கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். 2,94,115 பேர் பலியாகி உள்ளனர். 1,04,49,933 குணம் அடைந்தி ருக்கிறார்கள்.
இந்தியா 1,16,45,719 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1,60,003 பலியாகி இருக்கின் றனர். 1,11,49,324 குணம் அடைந்துள்ளனர். அதேபோல்
ரஷ்யாவில் 44,56,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95,030 பேர் பலியாகி உள்ளனர். 40,69,395 குணம் அடைந்திருக் கிறார்கள்.
இங்கிலாந்த் நாட்டில் 42,96,583 பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1,26,155 பேர் பலியாகி இருக்கி றார்கள். 36,73,211 குணமாகி உள்ளனர்.
மேலும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துருக்கி, ஜெர்மனி, உள்ளிட்ட சில குறிபிட்ட நாடு களில் கோரோனா வைரஸால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட் டிருக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.. ஆனால அரசு தரப்பில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டத்தையடுத்து 9, 10, 11ம் வகுப்புகளும் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.