காதலி ஜூவாலா குட்டாவை விரைவில் மணக்க உள்ளதாக தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால் தன் தந்தை மீதும், தன் மீதும் நடிகர் சூரி கொடுத்த புகார் பற்றியும் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் பற்றியும் விவரமாக மனம் திறந்து பேட்டி அளித்தார். சென்னையில் இன்று பேட்டி அளித்த விஷ்ணு விஷால் கூறியதாவது:
காடன் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து சிலுக்கு ர்பட்டி சிங்கம் இயக்குன டன் ஒரு படம் நடிக்க உள்ளேன். பின்னர், இன்று நேற்று நாளை 2ம் பாகம் படம் செய்கிறேன். இப்படம் மே மாதம் தொடங் குகிறது. ராட்சசன் 2ம் பாகம் செய்யும் எண்ணம் உள்ளது. அடுத்து ஜிவி பட இயக்குன ரிடம் கதை கேட்டு அது ரெடியாகிக்கொண்டிருக்கிறது. சொந்த தயாரிப்பாக 3வது படம் தயாரிக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை நிறைய நல்ல விஷயங்கள் இந்த வருடம் நடக்க உள்ளது. ரொம்ப தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். இந்த வருடம் சீக்கிரமாகவே கல்யாணம் செய்ய உள்ளேன். ஜுவாலா குட்டாவுடன் கல்யாணம் ரொம்ப சீக்கிரமே நடக்க உள்ளது. இவர் 14 முறை தேசிய அளவில் பேட்மிண் டன் போடியில் சேம்பியன் பட்டம் வென்றவர்.
எனது திரைப்படம் திரைக்கு வந்து 826 நாள் ஆகிறது. ரொம்ப நாளைக்கு பிறகு அடுத்தபடம் ரிலீஸ் ஆகிறது. அப்படி இருந்தும் நான் செய்தி யில் வந்துக் கொண்டே இருந் தேன்.
நடிகர் சூரி என் தந்தை மீது புகார் கூறியதுபற்றி கேட்கி றார்கள். அதுபற்றி நிறைய சொல்லலாம். அந்த வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. நான் அவரைப் (சூரி) பற்றி தவறான விஷயங்கள் சொல்ல வேண்டி வரும் அதன்பிறகு அவருக்கும் எனக்கும் வித்தியாசமில் லாமல் போய்விடும். ஒரு விஷயம் மட்டும் சொல்கி றேன் எனக்கும், என் தந்தைக் கும் நில விவகாரத்தில் சுத்த மாக சம்பந்தமே கிடையாது. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி என் அப்பா காலில் விழுந்து நீங்கதான் என்னு டைய கடவுள் என்று சொன் னவர் இன்று என் மீதும், என் அப்பா மீதும் மோசடி புகார் சொல்கிறார். உண்மை நிச்சயம் வெளியில் வரும். அவரை யாரோ தப்பாக வழிகாட்டுகிறார்கள்.
நான் சினிமா உள்ளே வரும் போது உங்க அப்பா போலீஸ் அதிகாரின்னு சொல்லாதே என்றார்கள். ஏன் சொல்லக் கூடாது என்றேன், அப்படி சொன்னால் நீ உழைக்காமல் சினிமாவில் வளர முயற்சிப் பதாக கூறுவார்கள் என்றார் கள். நானும் இரண்டு மூன்று வருடம் சொல்லாமல் இருந் தேன், ஆனால் இப்போது சொல்கிறேன் நான் ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். எல்லா தந்தையும் தன் மகன் வளர வேண்டும் என்று எண்ணுவதுபோல் என் தந்தையும் என்னைப்பற்றி எண்ணினார். அதற்காக பல பேருடைய கால்பிடித்திருக்கி றார். அது எனக்கு தெரியும்.
சிறுவயதிலிருந்தே என்னை இப்படித்தான் சொன்னார்கள். நான் நன்கு படித்து அதிக மார்க் எடுப்பேன் அப்போதும் இவங்க அப்பாவால் இவனுக்கு கேள்விதாள் கிடைத்துவிட்டது அதனால் தான் அதிக மார்க் வாங்கு கிறான் என்றார்கள். சிறுவயதிலிருந் தே கிரிக்கெட் ஆடுவேன். கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். டீமில் இணைந்த நான் கிரிக்கெட் ஆடும்போது நல்ல ஃபார்மில் இருக்கும் போது விளையாடுவேன். ஃபார்மில் இல்லாதபோதும் நான் ஆடியதால் என் அப்பா வால்தான் என்னை டீமில் வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள். அதனால் நான் கிரிக்கெட் ஆடுவதையே விட்டுவிட் டேன்.
சினிமாவிலும் அப்படி சொன்னார்கள். இப்போது அதுபற்றி கவலைப்படுவ தில்லை. என் அப்பா எப்படி பட்டவர் எவ்வளவு நேர்மை யானவர் என்பது எனக்கு தெரியும். அவர் பணியாற்றிய இடங்களில் போய் கேட்டா லும் அதை சொல்வார்கள். இதுபற்றி விளக்கமாக சொல்ல நினைத்தேன் அதான் சொல்கி றேன். இதற்கு பிறகும் என்னைப்பற்றி யாராவது குறை சொன்னால் அதுபற்றி கவலைப்படப்போவதில்லை.
நான் நன்றாக நடித்தால், படம் நன்றாக இருந்தால் ஓடப்போ கிறது இல்லாவிட்டால் ஓடாது. ராட்சசன் படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு எனது 9 படங்கள் ட்ராப் ஆன்து அதற்கு யார் காரணம், எதனால் ட்ராப் ஆனது என யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை.
சினிமாவில் என்னை நான் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்தது அதனால் நானே படம் தயாரிக்க தொடங்கினேன். எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் எல்லாமே ஒரு எல்லைக்கு மேல் நீ நடிக்கக் கூடாது என்பது போன்ற கதைகளாகவே இருக்கிறது. அதனால் அதுபோன்ற படங் களில் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.
படங்களில் நடிக்க சம்பளம் குறைப்பீர்களா என்கிறார்கள். கண்டிப்பாக குறைப்பேன் ஒரு தயாரிப்பாளராக எனக்கு தயாரிப்பாளர்களின் சிரமம் தெரியும் இன்னும் சொல்லப் போனால் ராட்சசன் படத்துக்கு ரூ 60 லட்சம் சம்பளம் குறைத் தேன்.
ராட்சசன் படத்துக்கு பிறகு வித்தியாசமான படங்கள் செய்யலாம் என்று முடிவு செய்தேன் அந்த வகையில் எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் படங்கள் உருவாகி வருகிறது.
ஜூவாலாவை என்னுடைய விவாகரத்துக்கு முன்பே தெரியுமா என்கிறார்கள். எனக்கு மனைவியுடன் விவா கரத்துக்கு ஆன பிறகுதான் ஜூவாலாவை எனக்கு தெரியும். அவருடன் இருப்பது காதல் இல்லை எங்கள் இருவருக்கும் இடையேயான புரிதல்தான். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக்கொண்டிருக்கிறோம். காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முதலில் காதல் திருமணம்தான் செய்தேன் ஆனால் அது நிலைக்க வில்லை. ஜூவாலாவுடன் எனக்கு நல்ல புரிதல் இருக்கிறது. எங்கள் வாழ்க்கை சந்தோஷமானதாக அமையும். அவரும் வாழ்க்கையில் முன்னேறி நிறைய கஷ்டங்க ளை தாண்டி வந்திருக்கிறார். அதுபற்றி என்னிடம் ஒருமுறை கூறினார். அதையே ஒரு படமாக எடுக்கலாம். ஆனால் அதற்கு நிறைய பட்ஜெட் வேண்டும் எதிர் காலத்தில் அது நடக்கும்.
காதல் படங்களில் நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள். காதல் கதையில் முழுக்க அது ஒரு விஷயம் மட்டுமே இருக்கும். அதிலும் வித்தியாச மான கதையாக இருந்தால் செய்வேன் முழுமையாக அப்படியொரு கதை வந்தால் நடிப்பேன்.
நீச்சல் தெரியாதவன் கடலில் குதித்தவன்போல்தான் நான் சினிமா என்ற கடலில் குதித் தேன். முதலில் இதில் உயிர் பிழைக்க வேண்டும் என்று எண்ணேனேன். அது நிறைவேறிவிட்டது இனி நான் மூழ்க மாட்டேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்து நான் உயரத்துக்கு வர சினிமா என்ற கடலில் நீச்சல் அடிப்பேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது.
ஒரு சில நடிகர்களைபோல் தோற்றத்தை மாற்றி நடிப்பீர்களா என்கிறார்கள். இபோது நான் சிக்ஸ்பேக் வைத்து நடிக்கிறேன் இதற்கு மேல் எப்படி மாற வேண்டும் என்று தெரியவில்லை.
இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.