Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சதி செய்வதா? டி.ராஜேந்தர் பேட்டி

கொரோனா ஊரடங்கு தளர்வில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். 28 நாட்க:ளில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.  பொங்கல் தினமான 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப் பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டில் ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் அதனால் தமிழ்நாட்டு தியேட்டரில் யாரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க  பொர்து செயாலாளர் பன்னீர் செல்வம் ஆடியோவில் பேசி வாடஸ் அப்பில் தகவல் வெளியிட்டார். இதனால் ஈஸ்வரன் படம் தியேட்டரில் வெளிவருவதில் சிக்கல்  ஏற்பட்டது.

இநதுகுறித்து சிம்புவின் தந்தையும். இயக்குனருமான டி.ராஜேந்தர் இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியாதாவது:
நாளை மறுதினம் ஈஸ்வரன் படம் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை நிறுத்தி விட வேண்டும், கடைசி நேரத்தில் ஒரு கழுத்தறுப்பு வேலையை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள் சதி. என்னவேண்டுமானாலும் பண்ணட்டும் சதி எல்லாவற் றையும் எதிர்கொள்ள மனிதனுக்கு வேண்டும் மதி. படத்துக்கு விதிக்க வேண்டு மென்று நினைக்கிறார்கள் தடை. என்ன காரணம்? தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர்களை எதிர்த்து நான் போட்டியிட்டு கிட்ட தட்ட 400 வாக்குகள் பெற்று, கள்ள ஓட்டு போட்டுத்தான் வெற்றி பெற்றார்கள் என்று வழக்கு மன்றத்தில் வழக்கு இருக் கிறது. தியேட்டர்களுக்கு உள்ளாட்சி வரி கூடாது என்று எதிர்த்ததற்காக, விபிஎஃ ப் கட்டணத்தை எதிர்த்ததற்காக, 50 பர்சண்ட் தான் டிக்கெட் அனுமதி என்கிறீர்கள் அப்ப ஏன் நாங்கள் ஜி எஸ்டி முழுமையாக கட்டணம் என்று கேட்டேன். பக்கத்து மாநிலம் ஆந்திரா, தெலங்கனா வில் உள்ளாட்சி வரி கிடை யாது என்பதால் கேட்டேன். போராடியதற்காக, தேர்தலின் நான் நின்ற ஒரே காரணத்துக் காக அத்தனை கூட்டமும் சேர்ந்து என்னை பழிவங்க வேண்டும் என்று எடுத்த நடவடிக்கை இது.


அன்பானவன் அசராதவன் அடங்கதவன் என்ற ஒரு படம். அந்த பட ரிலீஸின்போது அந்த படத்தை எப்படி, எந்த முறை யில் ரிலீஸ் செய்ய கொடுக் கிறார் என்பது தயாரிப்பாளர் விருப்பம். நடிகர் ஒன்றும் செய்ய முடியாது. அதில் நஷ்டம் வந்தால் நடிகர்தான் ஏற்க வேண்டும் என்று இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. சிம்பரசன்தான் அந்த நஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்று அன்றைக்கு தலைவராக இருந்த விஷால் பஞ்சாயத்து பண்ணுகிறார். பஞ்சாயத்து என்றால் சிலம்பரசனை எவ்வளவு அவமானப்படுத்த வேண்டு மோ அந்த தயாரிப்பாளர் அவமானப்படுத்தினார். ஒரு தலைபட்சமான முடிவு எடுத்தார்கள். சிலம்பரசன் கையெழுத்து போட்டாரா, அல்லது அவரது தாயார் கையெழுத்து போட்டாரா? கையெழுத்து போட்டது யார்? ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் விநியோகஸ்தருக்கு கட்டிவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது. இதை எதிர்த்து விஷால் மேலும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீதும் இரண்டு விதமான வழக்கு நீதிமன்றத் தில் சிம்பு போட்டி ருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கடிதம் கொடுத் தும் கூட கடைசி நேரத்தில் ஈரத்துணியை போட்டு கழுத்தை அறுப்பது போல் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்கி றார்கள். தியேட்டர் கொடுக்கா மல் பிரச்னை செய்கிறார்கள். எத்தனை தியேட்டர் வேண்டு மானாலும் பெரிய படத்துக்கு கொடுத்துக் கொள்ளுங்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் காரர்கள் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்ய முயலும்போது இவர்கள் கடைசி நேரத்தில் தடைவிதிக்க முற்படுகிறார் கள். கியூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தி லிருந்து கடிதம் எழுதுகிறார் கள் . தயாரிப்பாளர்கள் சங்கத் தின் ஒப்புதலை பெறாமல் நீங்கள் எந்த வேலையும் நடத்தக் கூடது என்று எழுது கிறார்கள். இதை ஆதாரப்பூர் வமாக எடுத்திருக்கிறேன். மைக்கேல் ராயப்பன் மீது வழக்கு இருக்கும்போது, கோர்ட் அவமதிப்பு வரும் என்று தெரிந்தும் அதையும் மீறி கியூபுக்கு கடிதம் எழுதி படத்தை நிறுத்த முயன்றால் என்ன பின்னணி. யார் தொழிலையும் முடக்கக்கூடது என்று காம்பெடிசன் ஆப் இந்தியா கூறுகிறது. நாங்கள் எந்த படத்தையும் தடுக்க முற்பட மாட்டோமென்று இவர்கள் அங்கு ஏற்கனவே பதில் அளித்திருக்கிறார்கள். இன்று அந்த உறுதியை மீறி இவர்கள் எப்படி இந்த முடிவு எடுக்கிறார்கள் என்றால் எனக்கு என்னவென்றே புரியவில்லை.


சிலம்பரசன் இரண்டரை கோடி கட்ட வேண்டும் என்கிறார்கள். இது என்ன நியாயம். இது என்ன மன்னராட்சியா? கியூபுக்கு கடிதம் கொடுத்துவிட்டு எங்களுக்கு மந்திரி சப்போர்ட் இருக்கு என்று கியூபில் மிரட்டி இருக்கிறார்கள். உடனே மந்திரியிடம் பேசினேன் அவர் என் பெயரை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள், ஈஸ்வரன் படத்துக்கு எந்த இடையுறும் எங்கள் தரப்பில் செய்ய மாட்டோம் என்று கூறினார். வெளிநாட்டில் 10 நாள் கழித்து ஒடிடியில் போடுவதாக இருந்ததால் அதை காரணம் காட்டி தமிழ் நாட்டில் தியேட்டர்கள் கொடுக்கக் கூடாது, அக்ரி மென்ட் போடிருந்தாலும் நிறுத்திவிடுங்கள் என்று இரவோடு இரவாக திரை அரங்கு உரிமையாளர் சஙகத் திலிருந்து பதிவு போடுகிறார் கள். உடனே ஈஸ்வரன் தயாரிப்பாளர் பத்து நாள் கழித்தும் போடவில்லை அதனால் எனக்கு லாஸ் ஆனாலும் பரவயில்லை, தமிழ்நாட்டு திரை அரங்கு களில்தான் ரிலீஸ் ஆக வேண்டும் என தியேட்டர் சங்கத்துக்கு பட தயாரிப்பாளர் கடிதம் கொடுத்திருக்கிறார். ஒரே படம்தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டும் என்றால் இது என்ன ஜனநாயகம். இந்த நாட்டில் என்ன நடக்கிறது. ஆளும் கட்சி கேட்க மாட்டார் களா?எதிர்கட்சி கேட்க மாட் டார்களா? சினிமாவை யாரும் கண்டு கொள்ள மாட்டார் களா? சிம்பரசனுக்கு இவ்வளவு தடையா? என்ன நடந்தாலும் சந்திக்கிறோம். யாரையோ வரவழைக்க ஈஸ்வரனை தடை செய்கிறார் கள். எல்லா தியேட் டரிலும் பெரிய படத்தை போட வேண்டுமென்கிறார் கள். பலரும் துரோகம் செய்கி றார்கள். எத்தனை தடை, எத்தனை சோதனை.
ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்தால் 30 கோடி தருவதாக கூறினார்கள். ஆனால் சிலம்பு, நான் தியேட்டரால்தான் வளர்ந் தேன். தியேட்டரில்தான் படம் வரவேண்டும் என்றார். ஆனால் ஈஸ்வரன் வரக்கூடாது என்று பின்னாடி நின்று வேலை பார்க்கிறார்கள்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

Related posts

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ பட வெளியீட்டு தேதி

Jai Chandran

நித்தம் ஒரு வானம் (பட விமர்சனம்)

Jai Chandran

Director @hariuthraa Strikes With LIPSTICK

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend