Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர் மகன் படத்தில் நடித்த அனுபவம் பகிர்ந்த நடிகர் சசிகுமார்..

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ்-சசிகுமார் நடிப்பில் வெளிவருகிறது எம்ஜிஆர் மகன் தனது முந்தைய திரைப்படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்றிலுமே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாக தந்த இயக்குநர் பொன்ராம், தனது புதிய படைப்பான எம்ஜிஆர் மகன் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், “100% பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம்” என்கிறார்.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அசத்தலான டிரெய்லர், 2 பாடல்கள் மீடியா மற்றும் பத்திரைகையாளர்கலுக்கு திரையிடப்பட்டது. பின்னர். எம்ஜிஆர் மகன் படத்தின் கதைபற்றி இயக்குனர் பொன்ராம் கூறினார். அவர் கூறியதாவது:

ஊரில் அப்பா. மகன் உறவில் ஒரு காலகடத்துக்கு பிறகு மோதல் ஏறொஅட்டும். அதில் பேசாமல் இருப்பார்கள். அப்படியொரு  சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக் கரு. தந்தையாக சத்யராஜ், மகனாக சசிகுமார், தாயாக சரண்யா, தாய்மாமனாக சமுத்திரக்கனி நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி), தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார், படத்தில் நாட்டு மருந்து மகத்துவம் பற்றி அதிகம் பேசப்படுகிறது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 சதவீதம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் எம்ஜிஆர் மகன் உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இவ்வாறு பொன்ராம் கூறினார்.

சசிகுமார் கூறியதாவது: .

’எம்ஜிஆர் மகன் கதையை இயக்குனர் பொன்ராம் என்னிடம் கூறியவுடனே எனக்கு பிடித்துவிட்டது. முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்ட கதை என்றும் கூறினார், முதலில் உங்களுடன் சமுத்திரகனியும் நடிக்கிறார் என்றது,ம் இது கொஞ்சம் சீரியாஸான படமாக இருக்கும் இருவரும் அறிவுரை சொல்லும் படமாகம் இருக்கும் என்றுதான் எண்ணினேன். ஆனால் இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் எல்லோரும் அறிவுரை சொல்கிறார்கள்.

எம்ஜிஆர் என்ற பெயருக்கு உள்ள மரியாதை இந்த தலைமுறையிலும் குறைய வில்லை. அதனால் படத்தில் அவர் பெயருக்கு எந்த இடத்திலும் களங்கம் வராமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டேய் என்று கூட யாரும் அழைத்துவிடாமல் வசனங்கள் கையாளப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ஜூனியர் ராமசந்திரன் நடித்துள்ளா. ஏம்ஜிஆர் குடும்பத்தை சேர்ந்தவர். அவரை ராமசந்திரன் என்று அழைக்கூட எனக்கு தயங்க்கமாக இருந்தது. அண்ணே என்று அழைக்கலாம் என்று கூட தோன்றியது.

 

இதில் ஹீரோயினாக மிருணாளினி நடிக்கிறார் அவர் வந்த முதல்நாளே அவருடன் காதல் டூயட் வைத்துவிட்டார்கள் அவருடன் ஒரு அறிமுகம் கூட இல்லை, பழகவில்லை ஆனால் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்று காட்சிகள் வைத்தார்கள்.  வேறு வழியில்லாமல்; நெருக்கமாக நடித்தேன். அவருக்கும் என்னைப்போலவே தயக்க்ம் இருந்ததாக கூறினார்.

சத்யாராஜ் சார் நிஜமாகவே எம்ஜிஆர் ரசிகர், ரசிகர் மட்டுமல்ல எம்ஜிஅர் வெறியர். அவர் எம்ஜிஆர் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். நிறைய இப்படத்தில் நான்0 கற்றுக்கொண்டேன்.

இவ்வாறு சசிகுமார் கூறினார்.

இப்படத்தில்  சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, ஆகியோருடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜூனியர் எம் ஜி ஆர், நமோ நாராயணன், சூப்பர் குட் சுப்பிரமணி, நந்திதா சுவேதா (கவுரவ வேடம்) நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி. இசை அந்தோனி தாசன். படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன். தயாரிப்பு வடிவமைப்பு ஜி துரை ராஜ். சண்டை காட்சிகள் ஸ்டண்ட் சில்வா. நடனம் தினேஷ், பிருந்தா, தினா. பாடல்கள் யுகபாரதி, அந்தோனி தாசன், கடல் வேந்தன், முருகன் மந்திரம். நிர்வாக தயாரிப்பு கே எஸ் செந்தில்குமர்-சித்தார்த் ராவ்.
புகைப்படங்கள்  கோமளம் ரஞ்சித். வடிவமைப்பு கிளிண்டன் ரோச். எஸ்.0 உடைகள் வடிவமைப்பு அஷ்வினி கிருஷ்ணா. மக்கள் தொடர்பு. நிகில் முருகன்.

Related posts

3 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் விக்ரம் நடிக்கும் “கோப்ரா”

Jai Chandran

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

Jai Chandran

பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend