ஜீவன் – மல்லிகாசரவத், ரித்திகாசென், யாஷிகா ஆனந்த் நடிக்க, வைத்தியாநாதன் பிலிம் கார்டன் வி.பழனிவேல் தயாரிக்கும், “ பாம்பாட்டம் “ திரைப்படத்தின் இயக்குநர் வி.சி. வடிவுடையான் கடந்த வருடம் 2020 ஆகஸ்ட் மாதம் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பின்னர் பிரதமர் நரேந்திரமோடிக்கு கச்சத்தீவை தமிழகத்துடன் மீண்டும் இணைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார்
தற்போது பிரதமர் கச்சதீவை மீட்டெடுக்க முயல்வதாக தகவல்கள் வருவதை கண்டு தான் ஒரு பாரதியஜனதா கட்சி தொண்டனாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். விரைவில் மோடிய்ன் முயற்சியால் கச்சதீவு தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று ஆவலுடன் காத்து இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார் இயக்குநர் வி.சி.வடிவுடையான்.
இத்துடன் இயக்குனர் .வடிவுடையான் பிரதமர் .மோடிக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை இணைத்துள்ளேன்.