Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15 முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்கலாம்.. மத்திய அரசு அனுமதி ..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதையடுத்து வணிக நிறுவனங்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
5 மாதத்துக்கும் மேலாக கொரோனா ஊரடங்கு தொடர்கிறது. ஆனால் மக்களின் வாழ்வாதரம் கருதி கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப் பட்டு வருகின்றன. மாநில அரசும் அதை பின்பற்றி தளர்வுகள் அறிவிக் கிறது. தற்போது அமலில் உள்ள 4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மத்திய அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க்படுகிறது. சினிமா தியேட்டர்கள் அக்.15 ஆம் தேதி முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பொழுது போக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள் திறக்கலாம். பள்ளி, கல்லூரிகள் , பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.
இவ்வாறு மத்திய அரசு அறிவித்திருக் கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் முழுவதும் தியேட்டர்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

Related posts

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்: கமல் கட்சி கருத்து

Jai Chandran

ECHO Teaser will be launched by R. Parthiepan & Vijay Antony

Jai Chandran

மணிரத்னத்தின் உதவி இயக்குனர் குறும்படத்தில் லீலா சாம்சன்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend