Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சிவாஜி 92வது பிறந்த தினத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.. ராம்குமார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு..

அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் 92வது பிறந்த நாள் இன்று சென்னை அடையாறு பாலம் அருகே அமைக்கப் பட்டுள்ள  சிவாஜி மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக் கப்பட்டது. மணிமண்டபத்திற்குள் சிவாஜி சிலைக்கு கீழே சிவாஜியின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப் பட்டி ருந்தது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  சிவாஜி மணிமண்டபத்துக்கு வந்து சிவாஜி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், வளர்மதி ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவாஜி மூத்த மகன் ராம்குமார். இளைய மகன் பிரபு மற்றும் சிவாஜி குடும்பத்தினர். பிஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் சிவாஜி உருவபடத்துக்கு மரியாதை செலுத்தினர்.
சிவாஜி ரசிகர்கள் ஏராளமான மணிமண்டபத் துக்கு வந்து சமூக இடை வெளி கடைபிடித்து சிவாஜி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Related posts

ATHARVAA RECALLS HIS EXPERIENCE in ANTHOLOGY ‘NAVARASA’

Jai Chandran

முதல் வர்சுவல் ரியாலிட்டி த்ரில்லர் வெப் சீரீஸ் ஜீ5 வெளியிட்டது..

Jai Chandran

அனிருத் குரலில் “நட்பு”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend