Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பாபர் மசூதி வழக்கில் எல்.கே.அத்வானி. உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை..

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இது இந்தியா முழுவதும் எதிரொ லித்தது. கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இந்தியா முழுவதும் இருந்து வந்த கர்சேவகர்கள் லக்ன்னோவில் திரண்டு மசூதி இடித்துதள்ளினர். மசூதி தரைமட்டமானது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படது. மாநில போலீசாரல் விசாரிக்கப்பட்ட வழக்கு பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உள்பட 49 பேர் மீது இதில் குற்றம் சாட்டப்பட்டதுடன் அவர்களுக்கு சி.பி.ஐயால் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த 17 பேர் இறந்து விட்டதால், மீதமிருந்த 32 பேர் மீது விசாரணை நடந்தது.
லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப் பில் தினசரி இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது. 350 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காலமாக இரருந்ததால் வீடியோ கன்பிரன்சிங் கில் பலர் வாக்குமூலம் அளித்தனர். அப்போது தாங்கள் நிரபராதி, அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கில் சேர்க் கப்பட்டதாகவும் கூறினர்கள். இதில் விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று லக்னோ சி.பி.ஐ. கோர்ட், தீர்ப்பு அளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, முரளிமனோகர், ஜோஷி உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி எஸ்.கே. யாதவ் வாசித்தார்.

தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறும்போது,’பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனை வரையும் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனச் சட்டத்திற் கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது. பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உறுதி செய்து இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும்’ எனக் குறிபிட்டார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், மகராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சி வரவேற்றுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறும்போது,’
‘ வரலாற்றில் இன்றைய தினம் சோக மான நாள். சதிச் செயல் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. இதற்கு எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் தயாரிப்பு தேவைப்படும் என விளக்குங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத் திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆட்சி யில் இருந்த பாஜக அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தது’ என்றார்.

Related posts

Soulful song IdhuvumKadandhuPogum

Jai Chandran

‘Fun Maaro’ from Sila Nodigalil?*

Jai Chandran

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend