கொரோனா ஊரடங்கு காலம் முழுவதும் சினிமா திஒயேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் ஷூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசு களுக்கு கோரிக்கை விடுத் தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதப்படி பிற மாநிலங்களில் தியேட்டர் கள் திறக்கப்பட்டது. தமிழத் தில் அனுமதி வழங்கவில்லை. கடந்த வாரம் தியேட்டர் அதிபர்கள் மல்டி பிளக்ஸ் சங்க தலைவர் அபிராமி ராமநான் தமிழக முதல்வர் எட்பாடி பழனிசாமியை சந்தித்து தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
சமீபத்தில் மாவட்ட கலெக்டர், மற்றும் மருத்துவர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு இன்று தியேட் டர்கள் திறக்க முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார்.
இதுகுறித்து முதல்வர் கூறும்போது,’தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது. 50 சதவித இருக்கைகளுடன் இயங்க கொரோனா வழிகாட்டுதல் நிபந்தனை களுடன் செயல்படலாம்’ என தெரிவித்திருக்கிறார்.இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் தியேடர்களை திறப்பதற்கான எற்பாடுகளை தொடங்கினர்.