பட,ம்: மாறன்
நடிப்பு: தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, ராம்கி, ஆடுகளம் நரேன், அமீர், கிருஷ்ணகுமார், போஸ் வெங்கட். மகேந்திரன், இளவரசு,
தயாரிப்பு: சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன்
இசை: ஜி.வி.பிரகாஷ்
இயக்கம்: கார்த்திக் நரேன்
ரிலீஸ்: டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டார் தமிழ் (ஒ டி டி)
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா
பத்திரிகையில் பணிபுரியும் செய்தியாளர் சத்யமூர்த்தி (ராம்கி) முக்கிய புள்ளி ஒருவரின் செய்தியை வெளியிட்டதால் கொல்லப்படுகிறார். அவரது மகன் மதிமாறன் (தனுஷ்). இவர் தந்தையை போலவே பத்திரிகையாளராகிறார். உண்மையை தயங்காமல் சொல்லும் குணம் கொண்டவரான மாறன் அரசியல்வாதி பழனி(சமுத்திரக்கனி) தேர்தலில் ஓட்டு மிஷின் மூலம் தில்லிமுல்லு செய்ய உள்ளதை அறிந்து அதை சமூக ஊடகத்தில் வெளியிடுகிறார். அது பரபரப்பாகிறது. அதிர்ச்சி அடையும் அரசியல்வாதி அதற்கான ஆதாரங்களை தன்னிடம் தராவிட்டால் கொன்றுவிடுவேன் என்று மாறனை மிரட்டுகிறார். அவனது தங்கையை எரித்துகொல்கிறார். இந்நிலையில் அரசியல் வாதியின் முறைகேட்டை அம்பலத்துக்கு கொண்டு வர மாறன் முயல்கிறார். அதில் அவரால் வெற்றி பெற முடிந்ததா என்பதே கிளைமாக்ஸ்.
துப்பறியும் பத்திரிகையாளராக தனுஷ் நடித்திருக்கிறார். அலுவல கத்தில் நேர்முக தேர்வுக்கு வரும் அவரிடம் இளவரசு போட்டி வைத்து மெசேஜ் பகிர்ந்து தோற்பதால் தனுஷுக்கு வேலை கிடைப்பது ருசிகரம்.
தங்கை எரித்துக்கொல்லப்பட்டுவிட்டார் என்ற விரக்த்தியில் தனுஷ் அரசியல்வாதியின் தில்லுமுல்லை அம்பலப்படுத்தாமல் குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் இருக்கும்போது அவரது பொறுப்பை காதலி மாளவிகா மோகனன் உணர்த்துவதும் அதன் பிறகு தனுஷ் ஆக்ஷனில் இறங்குவதும் காட்சிகளின் வேகத்தை அதிகரிக்கிறது.
பட்டாஸ் படத்தில் தனுஷ் அடிமுறை சண்டை காட்சிகளில் நடித்தபிறகு அவரிடம் ரசிகர்கள் ஆக்ஷன் காட்சிகளை இன்னும் அதிகமாக எதிர்ப்பார்ப்பது இயற்கை. ஆனால் மாறனில் தனுஷ் அதற்கு ஈடுகொடுக்காமல்போனது ஏமாற்றம்.
மாளவிகா மோகனனுக்கு அதிக வேலை இல்லை. ஸ்மிருதி வெங்கட் தங்கச்சி சென்டிமென்ட்டுக்கு பயன்பட்டிருக்கிறார்.
அரசியல்வாதி பழனியாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு வேலை செய்பவராக கெஸ்ட் தோற்றத்தில் வந்து செல்கிறார் அமீர்.
சத்யஜோதி பிலிமிஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருக்கி றார். “துருவங்கள் பதினாறு” படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். கதை, திரைக்கதையில் இன்னும் திருப்பங்கள், சஸ்பென்ஸ், விறுவிறுப்பு காட்டியிருக்கலாம்,.
ஜி வி பிரகாஷ் இசை, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு ஓ கே.
மாறன் – எளியவன்.