Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மிசஸ் மற்றும் மிஸ்டர் (பட விமர்சனம்)

படம்: மிசஸ் மற்றும் மிஸ்டர் (Mrs and Mr)

நடிப்பு: வனிதா விஜயகுமார், ராபர்ட், ஷகிலா, ஶ்ரீமன், அனுமோகன், ஆர்த்தி, கணேஷ், கும்தாஜ், பாத்திமா பாபு, செஃப் தாமு, கிரண், ரவிகாந்த்

தயாரிப்பு: ஜோவிகா விஜயகுமார்

இசை: ஶ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு: டி ஜி கபில்

இயக்கம்: வனிதா விஜயகுமார்

பிஆர் ஓ: நிகில் முருகன்

செஃப்‌ ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார் வனிதா. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்தாலும் தனக்கு குழந்தை இல்லையே என்ற வருத்தம் வனிதாவுக்கு அதிகரிக்கிறது. ராபர்ட்டோ குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்க மறுக்கிறார். இந்தநிலையில் வனிதா கர்ப்பமாகிறார்
ஆனால் அதற்கு தான் காரணமில்லை என்று ராபர்ட் கூறுகிறார். இதனால் கோபித்துக்கொண்டு வனிதா பிரிந்து செல்கிறார். பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்த வனிதா விஜயகுமார் இப்படத்தில் நடித்திருப்பதுடன் டைரக்ஷன் பொறுப்பும் ஏற்றுள்ளார்.

40 வயது பெண்ணாக வனிதா நடித்திருந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் விருந்து படைத்திருக்கிறார். இளவட்டங்கள் இந்த கவர்ச்சிக்கு மயங்குமோ மயங்காதோ தெரியாது ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ள நரைத்த காளைகளுக்கு சரியான விருந்துதான். போதாக்குறைக்கு 80ஸ் காலகட்ட பெரிசுகளுக்கு நரம்பை உசுப்பிவிடும் ஆண்டியாக ஷகீலா நடித்திருக்கிறார். இதில் ஷகிலா வயது காரணத்தால் கவர்ச்சியை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் . அவருக்கும் சேர்த்து வனிதாவே கவர்ச்சியை திறந்த புத்தகமாக காட்டியிருக்கிறார்.

ஒன்சைட் காட்டிக்கொண்டு கும்தாஜும்
தன் பங்குக்கு கிளுகிளுப்பூட்டுகிறார்.

படத்தில் பெரிய ஆன்ட்டி பட்டாளமே இருக்கிறது. எல்லாமே நட்புக்காக வனிதா செய்த வேலைபோல் தெரிகிறது. இளம் நடிகைகள் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஆயிரம்பேர் இருக்கிறார்கள் அடுத்தடுத்த படங்களில் வனிதா அவர்களை பயன்படுத்திக்கொள்வது படத்துக்கு ஒரு இளமை சூழலை தரும்.

என்னதான் கவர்ச்சி படமாக இருந்தாலும் என் கணவருக்குத்தான் பிள்ளை பெறுவேன், செயற்கை முறையில் வேறு ஒருவரின் விந்தணு மூலம் குழந்தை பெறமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் வனிதா தனது கதாபாத்திரத்தின் நேர்மையை காப்பாற்றி இருப்பது கதையை காப்பாற்றுகிறது.

எழில்மிகு பாங்காக், துபாயில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் வனிதா. இயக்குனராக வனிதா பாஸ் ஆகியிருக்கிறார். அடுத்த படமோ, வெப் சீரிஸையோ இன்னும் தீவிர டிஸ்கேஷனுக்கு பிறகு எடுப்பது முக்கியம்.

ஶ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.

மிசஸ் மற்றும் மிஸ்டர் – பி அண்ட் சி படம்.

By

ஜெயச்சந்திரன். கே.

www.trendingcinemasnow.com

Related posts

Suriya’s 43:Soorarai Pottru team comes together

Jai Chandran

Actor Arishkumar got vaccinated

Jai Chandran

யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend