கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 8 மாதம் ஊரடங்கு நீடித்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகே கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது அரசு.
2021ம் ஆண்டில் தற்போது கொரோனா 2ம் அலை இந்தியா முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது.. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகத்தில் விதித்திருக்கிறது. சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுகிழமைகளில் முழுஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் லாக்டவுன் வரும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்புகளுக்கும் தடை வருமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால அதற்கு தடை இல்லை.
இதுகுறுத்து அரசு தரப்பில் கூறும்போது, சினிமா படப்பிடிப்பு மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள லாம் என அறிவித்திருக்கிறது.