Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செவாலியே சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி 94வது பிறந்த நாள் இன்று. கொரோனா பரவல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மிக எளிமையாக  கொண்டாடப்பட்டது.

 

சென்னை அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி மணிமண்டபத்துக்கு இன்று காலை தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து சிவாஜி சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது சிவாஜி மூத்த மகன் ராம்குமார், இளையமகன் பிரபு, மற்றும் குடும்பத்தினர்  குழுமியிருந்து முதல்வரை வரவேற்றனர்,.

தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் சிவாஜி 94வது பிறந்த தினம் கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு உதவி, ஏழைகளுக்கு அன்னதானம் போன்ற நற்பணிகளை சிவாஜி மன்றத்தினர் செய்தனர்,

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிவாஜி உருவப்படங்கள்  அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தப்பட்டது,.

Related posts

சூப்பர் ஸ்டார் ‘அண்ணாத்த’ பொங்கல் வெளியீடு.

Jai Chandran

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jai Chandran

இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் ஒத்த செருப்பு சைஸ் 7

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend