Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கேப்டன் ( பட விமர்சனம்)

படம்: கேப்டன்

நடிப்பு: ஆர்யா,  காவ்யா, சிம்ரன், ஹரிஸ் உத்தமன், கோகுல், ஐஸ்வர்யா லட்சுமி, பரத்ராஜ்

தயாரிப்பு: தி ஷோ பீப்பிள், திங்க் ஸ்டுடியோஸ்

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு : எஸ்.யுவா

இயக்கம்: சக்தி சவுந்தராஜன்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூvவிஸ்

பி. ஆர் ஒ: சுரேஷ்சந்திரா, ரேகா (டி ஒன்)

இமயமலை   காடு சூழ்ந்த பகுதியில் உள்ள செக்டார் 42 என்ற இடம்  ராணுவத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய- -பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அங்கு ஒரு ஆலை செயல்பட்டுள்ளது.  தற்போது அது பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் அப்பகுதியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு எண்ணுகிறது.  ஆனால் அந்த பகுதிக்கு யார் சென்றாலும் உயிரோடு திரும்புவதில்லை. இந்நிலையில் அப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துவர ஆர்யாவை தலைமையாக  கொண்ட   இராணுவ டீம் அனுப்பப்படுகிறது.  அங்கு செல்லும் ஆர்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  மின்டோஸ் எனப்படும்  ஒரு அதிசய மிருகம் அப்பகுதிக்கு வருபவர்களை தாக்கி கொல்கிறது என்பது தெரிகிறது. ஆர்யாவை  மின்டாஸ் தாக்க வரும்போது  அதனுடன் சண்டையிட்டு அடித்து சாய்த்து ஆராய்ச்சிக்காக கொண்டு வருகிறார். அதை டாக்டர் சிம்ரன் ஆராய்ச்சி செய்து சில தகவல்களை சொல்வதுடன் இந்த ஒரு மின்டோஸ் மட்டுமல்ல ஏராளமான மின்டோஸ்கள் இருப்பதாகவும், அந்த கூட்டத்துக்கு ஒரு தலைமை மிருகம் இருக்கும் என்பதையும் வெளிப்படுத்து கிறார்.  தனி ஆளாக போராடி மின்டோஸின் தலைமை மிருகத்தை ஆர்யா எப்படி அழிக்கிறார் என்பதை படபடப்புடன் படம் விளக்குகிறது.

மிருதன், டிக் டிக் டிக் , டெட்டி படங்களை  இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் மற்றொரு புதிய கதைக்களத்தில் ஹாலிவுட் படங்கள் பாணியில் கேப்டன் படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படியொரு கதையை எடுத்த துணிச்சலுக்காக இயக்குனர் சக்தி சவுந்தர ராஜனை கைகுலுக்கி
பாராட்டலாம்.

ராணுவ டீம் கேப்டனாக வரும் ஆர்யா அந்த கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக  பொருந்தி இருக்கிறார்.  கேப்டன் என்பதால் தனது டீமிடம் தொண்டை கிழிய கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல்  சாந்தமாகவே பேசி உத்தரவுகள் பிறப்பித்து  சாகசங்கள் செய்திருப்பது கதாபாத்திரத்தை இன்னும் கனமாக்குகிறது.

செக்டார் 42  பகுதிக்கு செல்லும்  ஆர்யா விசித்திரமான மின்டோஸ் விலங்கை பார்த்து ஷாக் ஆவதும் அதனுடன் மோதி வீழ்த்துவதும் அரங்கை பதற்றமாக்குகிறது.  ஒரு மிருகத்தை அழித்ததும் அடுத்தடுத்து அதே போன்ற மிருகங்கள் வருவதும் அவைகளை அழிக்க இராணுவ பீரங்கியை ஆர்யா  கொண்டு செல்வதும் ஆக்‌ஷன் பரபரப்பை அதிகரிக் கிறது.

மின்டோஸ் கிங் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆர்யா அதனை தனி ஆளாக எதிர்கொள் வதும் ராட்சத ஆக்டோபஸ்ஸின்  கொடுக்கில் சிக்கிக் கொள்ளும் ஆர்யா நீருக்குள் மூழ்கடிக்கப் படுவதும் மூச்சு திணற வைக்கும்  ஆக்‌ஷன் காட்சி.

ஆர்யா டீமில் இருக்கும் கோகுல், ஹரிஸ், உத்தமன், காவ்யா  உள்ளிட்டோர்  தங்களது பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.

ராணுவ கேம்ப்பில் டாக்டராக வரும்  சிம்ரன் நெகடிவ்  பாத்திரத்தில்  மிளிர்கிறார்.  தனது திட்டம் நிறைவேற்றுவதற்காக தந்திரமாக காய் நகர்த்துவதும் அதை கண்டுபிடிக்கும் ஆர்யா சாதுர்யமாக செயல்பட்டு சிம்ரனின் திட்டத்தை முடியடிப்பதும் டுவிஸ்ட்.

ஆர்யாவை காதலிக்கும்  ஐஸ்வர்யா லட்சுமிக்கு அவ்வளவாக வேலை இல்லை. தொடக்கத்தில் சில காட்சிகளும் கிளைமாக்சில் சில காட்சிகளும் வந்து செல்கிறார்.

மின்டோஸ் மிருக  உருவத்தை முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளாக வடிமைத்திருக்கும் டெக்னீஷியன்கள் ஹாலிவுட்டுக்கு சவால் விடும்  திறமையான பணியை வெளிப்படுத்தியிருக் கின்றனர்.
இந்த எல்லா காட்சிகளுக்கும்  இசை மூலம் உயிர் கொடுத்திருக் கிறார் டி.இமான்.
கைலா பாடல், அக்ரினை நான் பாடல்கள் காதில் திரும்ப திரும்ப ஒலிக்கிறது.

எஸ்.யுவா ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்துக்கு ஈடுகொடுத்திருக்கிறது.

இயக்குனர் சக்தி சவுந்தர ராஜனின்  வெற்றிப் பட்டியலில்  மற்றொரு  வெற்றியை இணைத்திருக்கிறது கேப்டன்.

ஆக்டோபஸ்ஸுடனான  ஆர்யா மோதல் காட்சியை இன்னமும் த்ரில்லாக்கியிருக்கலாம்.

கேப்டன் – தமிழில் ஒரு ஹாலிவுட் அனுபவம்.

Related posts

கிக் படத்திற்காக சந்தானம் பாடிய பாடல்

Jai Chandran

of the Most Awaited Film #Memories Teaser Has Crossed 500K Views

Jai Chandran

தரன் இசையில்  இணையும் ஆரி அர்ஜுனன் – நரேன் கார்த்திகேயன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend