Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லில்லி ராணி( பட விமர்சனம் )

படம்: லில்லி ராணி

நடிப்பு: சாயா சிங், பேபி ரகுவாத் ஃபாத்திமா, தம்பி ராமையா, ஜெயபிரகாஷ், துஷ்யந்த்

தயாரிப்பு:  கிளாப் இன் சினிமாஸ், செந்தில் கண்டியர்

இசை:  ஜெர்வின் ஜோஷுஹா

ஒளிப்பதிவு : ஷிவா தர்ஷன்

இயக்கம்:  விஷ்ணு ராமகிருஷ்ணன்

பி. ஆர். ஒ: ஸ்ரீவெங்கடேஷ்

ராணி  (சாயா சிங்) ஒரு விபசாரி. ஹோட்டலில் ரைடுக்கு வரும்  போலீஸ் அதிகாரி சம்பவ மூர்த்தி ( தம்பிராமையா) ராணியிடம் அத்துமீறுகிறார்.  வருடங்கள் கழிகிறது குழந்தையுடன் வரும் ராணி சம்பவ மூர்த்தியிடம் முறையிட்டு அழுகிறார். தன் குழந்தை புற்றுநோயால் உயிருக்கு போராடுகிறது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்கிறார். அதற்கு 50 லட்சம் செலவாகும் என்பதால் சம்பவ மூர்த்தி அதிர்ச்சி ஆகிறார். ஆனால் ஏற்கனவே ராணியிடம் மந்திரி மகன் ஒருவன் உறவு வைத்தி ருப்பது தெரிகிறது. குழந்தை அவனுக்கு  பிறந்தது என்று சம்பவ மூர்த்தி பிளேட்டை திருப்பிப் போட்டு அவனிடம் பணம் கேட்கி றார்.  அவனும் பணம் தர சம்மதிக் கிறான். இதற்கிடையில் ராணி யையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்ல திட்டமிடுகிறான். அதற்கு ராணி சம்மதிக்க மறுக்கிறார்.  இதன் முடிவு என்ன?
குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா  என்பதற்கு படம் பதில் சொல் கிறது.

மொத்தமே ஐந்தாறு  க்தாபாத் திங்கள்தான் ஆனால்  சுவையான சிறுகதைபோல் சிரிப்பு, சோகம், கிளுகிளுப்பு என்று படம் செல்கிறது.

சாயாசிங்கை ஞாபகமி ருக்கிறதா தனுஷுடன் மன்மத ராஜா பாடலுக்கு ஆட்டம்போட்டவர்.  இப்படத்தில் ராணி என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் என்றில்லாமல் எதர்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக் கிறார்.

தம்பி ராமையாவை சந்தித்து, “நீங்க செஞ்ச தப்பால் பிறந்த குழந்தை உயிருக்கு போராடு கிறாள் காப்பாற்றுங்கள்” என்று மன்றாடுவதும் அதைக்கேட்டு ஷாக் ஆகும் தம்பி ராமையா 59 வயசுலே இப்படியொரு நிலைமைக்குள்ளானதை எண்ணி புலம்புவது கலகலப்பு.

மந்திரி மகன் சாயசிங்கை மிரட்டி உருட்டுவான் என்று பார்த்தால் அவன் சயாசிங்குடன் குடும்பம் நடத்த துடியாய் துடிப்பது என்ன கணக்கு என்று புரியவில்லை. மந்திரி மகனாக துஷ்யந்த் நடித்திருக்கிறார்.

காட்சிகளை சினிமாத் தனம் இல்லாமல் அவரவர் மனசாட்சிப்படி கதாபாத்திரங் களை சித்தரிக்க முயன்றிருக் கிறார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்.  ஒரு இயல்பான மலையாள படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்து கிறார்.

ஜெர்வின் ஜோஷுஹா இசையும்,  ஷிவா தர்ஷன் ஒளிப்பதிவும் இயல்பாக காட்சிகளை நகர்த்துகிறது.

லில்லி ராணி- கையேந்திபவன்  டேஸ்ட் டிபன்

Related posts

Velmurugan_Sung a sSpecial Song in SceneNumber62

Jai Chandran

இயக்குனர் வெங்கட் பிரபு நன்றி கடிதம்

Jai Chandran

இயக்குனர்கள் நடிகர்கள் ஆவது ஏன்? கே.பாக்யராஜ் ருசிகர பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend