Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

முதல் நீ முடிவும் நீ (பட விமர்சனம்)

படம்: முதல் நீ முடிவும் நீ

நடிப்பு: அம்ரிதா மண்டரின், புர்வா ரகுநாத், ஹரிஷ் கே, கிஷன் தாஸ்,  ஷரன் குமார், ராகுல் கண்ணன். மஞ்சுநாத், மீதா ரகுநாத், வருண் ராஜன். சச்சின் நாச்சியப்பன்,  கவுதம் ராஜ், நரேன், ஹரிணி ரமேஷ் கிருஷணன்,

தயாரிப்பு:  சமீர் பரத் ராம் (சூப்பர் டாக்கிஸ்)

இசை: தர்புகா சிவா

ஒளிப்பதிவு: சுஜித் சுராங்

இயக்கம்: தர்புகா சிவா

ரிலீஸ் : ஜீ5

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருதலை ராகம்போல் சில காதல் கதைகள் வரும் அது வெற்றியும் பெறும் அந்த வரிசையில் 90ஸ் கிட்ஸ்களின்  பள்ளி, காதல் அனுபவங்களை சுமந்து வந்திருக்கும் படம் முதல் நீ முடிவும் நீ.

பள்ளியில் இறுதி ஆண்டு படிப்பை படிக்கும் மாணவ மாணவிகள்  தங்களின் நட்பு, முதல் காதல், முதல் துரோகம் என பல சம்பவங்களை உள்ளடக்கிய கதை.

வினோத் (கிஷன் தாஸ்), சைனீஸ் (ஹரிஷ் கே), துரை( ஷரன்குமார்), பிரான்ஸிஸ் ( ராஹுல் கண்ணன் ),  மஞ்சுநாத் (நவுசத்). ரேகா (மேதா ரகுநாத் ), கேத்ரின் (புர்வா ரகுநாத்), விக்கி (ஹரினி ரமேஷ் கிருஷ்ணன்) எல்லோரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள். இவர்களில் வினோத், சைனீஸ் உள்ளிட்ட சில நண்பர்கள் நெருக்கமான நட்புடன் இருக்கின்றனர். வினோத்துக்கும், ரேகாவுக்கும் ஆரம்பம் முதலே காதல் இழையோடுகிறது. இது சக நண்பர்களுக்கும் தெரியும். படிப்பை முடித்தவுடன் பெரிய இசை அமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான் வினோத். அதற்கு ரேகாவும் ஊக்கம் தருகிறார். அவனுக்கு கிதார் பரிசளிக்கிறார். நெருக்கமான இந்த காதலுக்குள் விரிசல் ஏற்படுகிறது. வேறு பெண் வினோத்திடம் நெருக்கம் காட்டுகிறாள். அதை வினோத் ஏற்காவிட்டாலும் ரேகாவுக்கு வினோத் மீது சந்தேகம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் ரேகா வினோத்திடம் பிரேக் அப் செய்துவிட்டு விலகுகிறாள். வாழ்க்கை உருண்டோடு கிறது. பெரிய இசை அமைப்பாளராகிறான் வினோத். பழைய நண்பர்கள் ஒன்று சேரும் பார்ட்டி நடக்கிறது. அதற்கு தனது வருங்கால கணவருடன் வருகிறாள் ரேகா. அவர்களுக்கு வினோத் வாழ்த்து சொன்னாலும் ரேகா மீதான உண்மையான காதல் அவனை வாட்டுகிறது. ரேகா தன் வாழ்வில் இல்லை என்று நினைத்து கதறுகிறான்.  அப்போது காதல் கடவுள் அவன் முன் வந்து நிற்கிறார். அவரிடம் முதலில் ரேகாவை வேண்டாம் என்று சொன்ன வினோத் இப்போது அவள்தான் மனைவியாக கிடைக்க வேண்டும் என்று கேட்கிறான். அடுத்து நடப்பது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

படத்தில் நடித்திருக்கும் இளம் நடிகர், நடிகைகள் அனைவருமே புதுமுகங்கள். அதுதான் படத்தையும் ஃபிரஷ்ஷாக கண்முன் நிறுத்துகிறது.  வினோத்,ரேகா, சைனீஸ், விக்கி என ஒவ்வொரு பாத்திரமும் தங்களின் இயல்பான நடிப்பால் உயிர் பாத்திரங்களாக உலா வருகின்றன.

பள்ளி பருவத்தில் நண்பர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் படுசுவரஸ்யாக படமாக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் இதில் ஏதாவது ஒரு காட்சியாவது அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த சம்பவமாக நிச்சயமாக இருக்கும்.

வினோத் கதாபாத்திரத்தில் வரும் கிஷன் தாஸ் இரண்டாம் பகுதியில் தாடியுடன் நடித்திருக்கும் காதல் தோல்வி நடிப்பு தேவதாஸுக்கு இணை. தன் மனதில் உள்ள காதலை நண்பர்கள் சந்திப்பு கூட்டத்தில் பாடலாக பாடும்போது கண்கள் கலங்க வைக்கிறார். அதேபோல் ரேகாவாக நடித்திருக்கும் மீதா இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

சைனீஸாக வரும் ஹரிஷ் ஒரு காதல் இல்லை என்றால் இன்னொரு காதல் என்று ஆளை மாற்றிக்கொண்டே இருப்பது நகைச்சுவை தோரணங்கள். மற்ற எல்லா பாத்திரங்களும் தங்களின் பங்களிப்பை 100 சதம் வழங்கி கவனத்தை ஈர்க்கின்றனர்.

பள்ளி வாழ்க்கை வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை சுளீரென்று நெற்றிப்பொட்டில் அடிதாற்போல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் தர்புகா சிவா. இசை அமைப்பாளரான இவர் இப்படம் மூலம் இயக்குனர் பொறுப்பும் ஏற்று முதல் படத்திலேயே டிஸ்டிங்ஷன் மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

சுஜித் சுராங் ஒளிப்பதிவு பள்ளி பதிவையும் வாழ்க்கை பதிவையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.

முதல் நீ முடிவும் நீ – இளசுகளின் காதல் பிளஸ் வாழ்க்கை போராட்டம்

By

க.ஜெயச்சந்திரன்

 

 

Related posts

விஜய்யை விமர்சிப்பது ஏன்? எக்ஸ்ட்ரீம் விழாவில் ஆர். வி.உதயகுமார் கேள்வி

Jai Chandran

சினிமா திரை அரங்குகள் திறக்க அனுமதி.. தமிழக முதல்வர் தேதி அறிவிப்பு..

Jai Chandran

Sony Liv -ல் பரத் நடித்திருக்கும் “ நடுவன் “

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend