படம்: நேற்று இந்த நேரம்
நடிப்பு: ஹாரிக் ஹாசன், ஹரிதா மோனிகா ரமேஷ்,, காவியா அமைரா, திவாகர் குமார், நித்தின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா
தயாரிப்பு: கே ஆர் நவீன் குமார்
இசை: கெவின் என்
ஒளிப்பதிவு: விஷால் எம்
இயக்கம்: சாய் ரோஷன் கே ஆர்
பி ஆர் ஓ: சதீஸ்வரன்
ஹாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ்,, காவியா அமைரா, திவாகர் குமார் உள்ளிட்ட நண்பர்கள் ஜாலியாக பார்ட்டி செய்ய ஊட்டி செல்கின்றனர். அங்கு அவர்களுக்குள் காதல் மோதல் என சில சில்லறை ரகளைகள் நடக்கின்றன. திடீரென்று ஹாரக் உள்ளிட்ட இரண்டு பேர் காணாமல் செல்கின் றனர். இது குறித்து சக நண்ப ர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது. ஒரு கட்டத்தில் காணாமல் போனவர்கள் கொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது அவர்களை கொன்றது யார்? எதற்காக கொல்லப்பட் டார்கள் என்பதற்கான சஸ்பென்சை நேற்று இந்த நேரம் பட கிளைமாக்ஸ் உடைக்கிறது
முழுக்க முழுக்க ஊட்டியிலேயே மொத்த படப்பிடிப்போம் நடத்தப்பட்டுள்ளது. ஊட்டி குளிர் அத்துடன் காதல் இரண்டையும் சேர்த்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது.
ஹாரிக் ஹாசன் திடீரென்று காணாமல் போனது குறித்து சக நண்பர் போலீஸில் புகார் கொடுக்கும் போது இவர் தான் அவரை தீர்த்து கட்டி இருப்பாரோ என்ற தொடக்க சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுகிறது. ஒரு கட்டத்தில் புகார் கொடுத்த நண்பரே காணாமல் போனார் என்ற தகவல் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்துகிறது.
படத்தில் ஆக்சன் காட்சிகள் பெரிதாக இல்லாவிட்டாலும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் நாவலை வரிக்கு வரி படிப்பது போன்ற சுவாரசியத்தை ஏற்படுத்தி இருப்பது பிளஸ். அடுத்து யார் காணாமல் போகப் போகிறார்கள் என்ற சஸ்பென்சை அதிகரிக் கிறது.
ஹாரிக்கின் நண்பர்களாக வரும் மற்ற நடிகர், நடிகைகள் எல்லோருமே புதுமுகங்கள் தான் ஆனால் காட்சிக்கு ஏற்ப தங்களின் முக பாவங்களையும் உணர்வு களையும் வெளிப்படுத்தி உதவி இருக்கின்றனர்.
2k கிட்ஸ் ஜோடிகளின் கதை என்பதால் காதலை லிவிங் டுகெதர் என்ற பாணிக்கு மாற்றி கதையை வில்லாக வளைத்து கொண்டு செல்லும் இயக்குனர் விசாரணை அதிகாரியாக வருபவரின் இயல்பான நடிப்பால் சீன்கள் மெருகேற்றுகிறார்.
எது நட்பு, எது காதல், எது காமம் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இன்றைய இளைஞர் களின் நட்பு தடம் மாறி போயிருப்பதை இயக்குனர் சாய் ரோஷன் கே ஆர் வெட்ட வெளிச்ச மாக்கி இருக்கிறார்.
கே ஆர் நவீன் குமார் தயாரித்தி ருக்கிறார்.
கெவின்.என் இசை காட்சிகளை ஓவர் டேக் செய்யாமல் அடக்கி வாசித்து இருக்கிறது.
விஷால் எம் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது.
நேற்று அந்த நேரம் – கூட்டுசதி சஸ்பென்ஸ் திரில்லர்.