Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் கே.பாக்யராஜ், இனியாவுக்கு விருது

தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நூறடி சாலையில் உள்ள விஜய் பார்க் ஒட்டலில் நடந்தது.  நீதியரசர், முனைவர் எஸ். கே. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் கே. பாக்கியராஜ், தேசிய விருது பெற்ற திரைப்படஇயக்குனர், முனைவர் ஞான ராஜசேகரன் முன்னிலையில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கினார்கள்.

மேலும் தேசிய சினிமா சேம்பர் சேவாரத்னா, முனைவர் அன்பு சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், “கலைமாமணி ” நெல்லை சுந்தரராஜனும் இணைந்து விருது வழங்கினார்கள்.

இயக்குனர் கே. பாக்யராஜுக்கு நீதியரசர் எஸ். கே. கிருஷ்ணன்,  திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன் இணைந்து விருது வழங்கி வாழ்த்தினர்,

மேலும் நடிகர்கள் சிறந்த நடிகர் ஜெய் ஆகாஸ், சிறந்த வில்லன் ஆரியன், சிறந்த குணசித்திர நடிகர் ரமேஷ் கண்ணா, வாழ்நாள் சாதனையாளர் பாபு கணேஷ்,  சிறந்த புதுமுக நடிகர் ரிஷி காந்த், நடிகைகள் சிறந்த கதாநாயகி சிறப்பு விருது இனியா, சிறந்த புதுமுக நாயகி அனுகிருஷ்ணா, மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களான சிறந்த திரைப்பட கம்பெனியான 2டி என்டர்டைன்மெண்ட் சார்பாக துணைத்தலைவர் மனோஜ் தாஸ், சிறந்த குடும்ப பட இயக்குனர் வி. சேகர், சிறந்த இசையமைப்பாளர் தீனா, சிறந்த எடிட்டர் கே. எல். பிரவின், சிறந்த ஒளிப்பதிவாளர் கே. எஸ்..செல்வராஜ், “சிவப்பு மழை “கின்னஸ் சாதனை ஒளிப்பதிவாளர் எஸ். ரவிமாறன் சிவன், சிறந்த கதாசிரியர் “கலைமாமணி “லியாகத் அலிகான், சிறந்த கதாசிரியர் சிறப்பு விருது வி. பிரபாகர், சிறந்த பின்னணி பாடகி ரெஹானா, சிறந்த ப்ரொடக் ஷன் கண்ட்ரோலர் சாமிநாதன், சிறந்த காஸ்ட்டிங் டைரக்டர் ( SIFCDCMA) தாரா உமேஷ், சிறந்த மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோருக்கு விருது பெற்றனர்.

விழாவில் இயக்குனர் வி. சேகர்,  பேசும்போது,’ நான் ” நீங்களும் ஹீரோ தான் ” இயக்கும்போது அதிக சம்பளம் வாங்கி கொண்டிருந்த கௌண்டமணி, செந்தில் போன்றவர் களிடம் பேசி, பேசி சம்பளத்தை குறைத்து எனக்கு உதவி செய்தவர் இந்த நெல்லை சுந்தர்ராஜன் தான். இது போல் ” நான் புடிச்ச மாப்பிள்ளை ” படத்திலும் நடிகைகள் சரண்யா, ஐஸ்வர்யா இருவரிடத்திலும் குறைந்த சம்பளம் பேசி அந்த படம் வெளியிட பெரும் உதவியாக இருந்தார். இந்த “கொரோனா” காலகட்டத்தில் இப்படி ஒரு விழா செய்வது நெல்லை சுந்தரராஜன் ஒருவரால் மட்டுமே முடியும்” என்றார்.

தேசிய விழா சேம்பர் முனைவர் அன்பு சுந்தரம், நீதியரசர் எஸ். கே. கிருஷ்ணன், திரைப்படம் இயக்குனர் ஞானராஜசேகரன், இசையமைப்பாளர் தீனா, ரமேஷ் கண்கண்ணா போன்றவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

முன்னதாக “கலைமாமணி ” நெல்லை சுந்தரராஜன் அறிமுக உரையும், அன்பு சுந்தரம் வரவேற்புரையும் நிகழ்த்தினார்கள்.

Related posts

அதோ முகம் (பட விமர்சனம்)

Jai Chandran

நாயாடி (பட விமர்சனம்)

Jai Chandran

விருமன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend