Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வருக்கு உடற்பயிற்சி உரிமையாளர்கள் சங்கத்தினர் நன்றி

முதல்வர் மு க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஜிம் பயிற்சி சங்கத்தின் சார்பில். தலைவர் வி ராஜா,  துணை தலைவர் ஐ. பிரசன்ன குமார், செயலாளர் ஏ.பஹத் ஜஹாங்கீர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்  கூறியதாவது:

இந்த இரண்டாவது கொரோனா தொற்று காலத்தில் மிகவும் தங்களது நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த கொடிய நோயை கட்டுக்குள் கொண்டுவந்து சில மாதங்களாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடங்களை இன்று திறப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்து அனுமதி அளித்திருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,

மேலும் தங்களது தலைமை ஏனைய மாவட்டங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்களையும் திறப்பதற்கு பரிசீலனை செய்யவேண்டும் என்பதும் இந்த கால கட்டத்தில் எங்களது மிகப்பெரிய இழப்புகள் ஆன *மின்சார கட்டணம், வங்கி கடன்கள்* மற்றும் *கட்டிட வாடகை* பிரச்சனைகள் இவற்றிலிருந்து எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவிக்கரம் புரிய வேண்டும் என்று இந்த நன்றி கடிதம் மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

 

Related posts

Thangalaan set to gross 100 crore at the WW box office.

Jai Chandran

‘தங்கலான்’ குழுக்கு விருந்தோம்பலுடன் விக்ரம் நன்றி

Jai Chandran

உபேந்திராவின் பான்-இந்தியா படம் “நெக்ஸ்ட் லெவல்” தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend