பீட்ஸா, ஜிகிர்தண்டா, டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் நெருப்புடா உள்ளிட்ட பல பாடல்கள் எழுதி உள்ளார். கனா படத்தை இயக்கியும் உள்ளார்.
அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று காலமானார்
அருண்ராஜ காமராஜ் மனைவி மறைவுகு உதயநிதிஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது,’ நேர்த்தியான இயக்குனர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்” என்றார்-உதயநிதி ஸ்டாலின்.
previous post