படம்: கணம்
நடிப்பு: அமலா, சர்வானந்த், ரிதுவர்மா, சதிஷ், ரமேஷ் திலக், நாசர், ரவி ராகவேந்தர், மாஸ்டர் ஜெய், மாஸ்டர் ஹிதேஷ் , மாஸ்டர் நித்யா, யோகி ஜாப்
தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு
இசை: ஜாக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
இயக்கம்: ஸ்ரீகார்த்திக்
ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி
பி ஆர் ஒ: ஜான்சன்
சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் பள்ளி தோழர்கள். சிறுவயதில் தாய் அமலாவை விபத்தில் பறிகொடுத்த சர்வானந்த் அவர் நினைவாகவே வாடுகிறார். அப்போதுதான் விஞ்ஞானி நாசர் அவர்களுக்கு பழக்கமாகிறார். தான் கண்டுபிடித்த டைம் மிஷின் மூலமாக கடந்த காலத்துக்கு சென்று தாயை விபத்திலிருந்து காப்பாற்றலாம் என்கிறார். ஆச்சர்யம் அடையும் சர்வானந்த் அதற்கு சம்மதிக்கிறார். சதீஷும், திலக்கும் அவருடன் கடந்த காலத்துக்கு சென்று காதலையும், தனது படிப்பையும் கரெக்ட் செய்ய முடிவு செய்கின்றனர். மூவரும் டைம் மிஷின் மூலமாக கடந்த காலத்துக்கு செல்கின்றனர். சர்வானந்த் தனது அம்மாவை சந்திக்கிறார். சதீஷ் தன்னை காதலித்த பள்ளி தோழி யையும், திலக் தன் இளவயது தோற்றத்தில் உள்ள சிறுவனையும் சந்திக்கின் றனர். அவர்கள் மூவரும் நினைத்தபடி எல்லாவற்றையும் சரி செய்தார்களா? விபத்திலிருந்து தாய் அமலாவை சர்வானந்த் காப்பாற்றினாரா என்பது உள்பட பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
சில படங்கள் சுவாரஸ்யமான சப்ஜெக்ட்டுக்காகவே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் அதில் டைம் மிஷின் சப்ஜெக்ட்டும் ஒன்று. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலகட்டத்தில் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகார்த்திக் . திரைக் கதையில் சுவை சேர்க்க சில கடினமான முடிச்சுக்களையும் போட்டு அதை ஒவ்வொன்றாக அவிழ்த்து காம்ப்ரமைஸ் செய்திருக்கிறார்.
எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்த சர்வானந்த் பல ஆண்டு களுக்கு பிறகு வலுவான தாய் சென்ட்டிமென்ட் கதையுடன் மீண்டும் தமிழ் ரசிகர்களை எதிர்கொண்டிருக்கிறார்.
இயற்கையான நடிப்பு வெளிப் படுத்துவதில் சர்வானந்த் சாமர்த்தியசாலி அதை இப்படத்தி லும் நிரூபித்திருக்கிறார்.
இசையில் சாதிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் ஒரு தனி அறைக்குள்ளேயே முடங்கிவிடும் சூழலில் அவருக்கு நம்பிக்கை ஒளி கீற்றாக துணை நிற்கிறார் ரிது வர்மா.
டைம் மிஷினில் சர்வானந்த், சதீஷ், திலக் மூவரும் எப்போது கடந்த காலத்துக்கு செல்லப் போகி றார்கள் என்ற ஆர்வம் சீனுக்கு சீனுக்கு சீன் அதிகரிக்கிறது.
டைம்மிஷின் மூலம் சர்வானந்த், சதீஷ், திலக் மூவரும் 90களின் காலகட்டத்துக்கு சென்றதும் கதைக் களமும் அதற்கேற்ப மாறிவிடுகிறது. மூவரும் தங்களின் பள்ளிக்கு சென்று அங்கு சிறுவயதில் தாங்கள் இருப்பதை கண்டு ஆச்சர்யப் படுவதும் அவர்களுடன் மூவரும் பழகுவதுமாக கதை ஜாலியான எல்லைக்குள் சென்று சிரிப்பு சிதறல்களை தியேட்டர் முழுவதும் தெறிக்க விடுகிறது.
தாய் அமலாவை சர்வானந்த் கண்டதும் பாசத்தால் நெகிழ்வதும், உருகுவதுமாக கண்களை குளமாக்குகிறார்.
திடீரென்று சிறுவர்கள் மூவரும் டைம் மிஷினை எடுத்துக்கொண்டு எதிர்காலத்துக்கு சென்று விடுவது படுடுவிஸ்ட்.
சர்வானந்த்தை அவரது காதலி ரிதுவர்மா சிறுவனாக சந்திப்பதும் அவரை அக்கா அக்கா என்று அந்த சிறுவன் அழைப்பதும் கலகலப்பு.
சதீஷ் தனது பள்ளி தோழியை உஷார் செய்ய நூல் விடுவதும், திலக் தன் சிறுவயது தோறத்தில் உள்ளவனை படிக்கச் சொல்லி மிரட்டுவதும் அமர்க்களம்
தாய் அமலாவை விபத்திலிருந்த்து காப்பாற்ற சர்வானந்த் எடுக்கும் முயற்சிகள் விறுவிறு.
டைம்மிஷின் விஞ்ஞானியாக வரும் நாசர், பாத்திரத்தின் தன்மை யோடு ஒன்றிப்போய் விடுகிறார்.
படத்தின் மற்றொரு ஹைலைட் அமலா மீண்டும் தமிழில் நடிக்க வந்திருப்பது..
மகன் மீதான பாசத்தை அமலா ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக வெளிப்படுத்துவதும் மென்மையான சிரிப்பில அன்பையும் தாய்ப் பாசத்தையும் குழைத்து வழங்குவதையும் எத்தனை முறை வேண்டு மானாலும் ரசிக்கலாம்.
மாஸ்டர் ஜெய், மாஸ்டர் ஹிதேஷ் , மாஸ்டர் நித்யா, யோகி ஜாப் சுட்டித்தனம் செம கெட்டி.
நல்ல கதைகளை தேர்வு செய்வதில் எப்போதும் ட்ரீம்வாரியர்ஸ் எஸ் ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு சோடை போவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
சுஜித் சாரங் ஒளிப் பதிவில் தெளிவு இருந்தாலும் மூன்று காலகட்டங்களை உணர்த்தும் விதமாக கலர் ஷேட்களில் வித்தியாசம் காட்டி யிருக்கலாம். காலகட்ட வித்தியாசத்தை உணர்த்த ரஜினியின் அருணாச்சலம், பேட்ட பட போஸ்டர் மட்டுமே உதவியிருக்கிறது.
ஜாக்ஸ் பிஜாய் இசையில் அம்மா பாடல் நெகிழ்ச்சி. இவரும் காலகட்ட மாற்றத்தை உணர்த்த இசையில் வேறுபாடு காட்டியிருக் கலாம்.
இயக்குனர் ஸ்ரீகார்த்திக் தன் பங்கை கச்சிதமாக வழங்கி யிருக்கிறார். அதே சமயம் டைம் மிஷினே வந்தாலும் விதியை மாற்ற முடியாது என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்து விவாதத்தை கிளப்பியிருக்கிறார். மதியாலும் விஞ்ஞானத்தாலும் விதியை வெல்ல முடியாது என்பதை சொல்லியிருக்கிறார்.
கணம்- மதிக்கும் விதிக்குமான யுத்தம்.