Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிரிட்டிஷ் அகடமி ‘பாப்டா’ தூதராக ஏஆர்.ரஹ்மான் நியமனம்.

பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) என்ற அமைப்பு இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் தனித்துவமான அமைப்பாகும். சினிமா துறையில் திறமையானவர்கள் 5 பேரை கண்டறிந்து விருதுகளையும் வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சினிமா, டி.வி துறையில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளியில் கொண்டு சென்று பிரபலப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரகுமானின் பங்களிப்பு இதில் இருக்கும்.

இந்த அமைப்புக்கு ‘நெட்பிளிக்ஸ்’ ஆதரவு அளித்திருக்கிறது. சினிமா துறையில் திறமைசாலிகளை கண்டறிவதற்காக பாப்டா அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவிச்சிருக்கிறார்.

Related posts

’தனி ஒருவன்’ வில்லன் நடிகர் அனில் முரளி காலமானார்..

Jai Chandran

மத்திய அரசுக்கு புரட்சி திலகம் சரத்குமார் வேண்டுகோள்

Jai Chandran

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 பாண்டிராஜ் இயக்குகிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend