Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி

மகாமுனி,  மௌனகுரு போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய சாந்தகுமார் தயாரித்து இயக்கும புதிய படம் ரசவாதி. இதில் அர்ஜுன் தாஸ், தாண்யா ரவிச்சந்திரன்,  ரேஷ்மா வெங்கடேஷ், ரம்யா சுஜித் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் சாந்தகுமார் கூறியதாவது:

ரொமான்ஸ், ஆக்சன், திரில்லர் எல்லாம் கலந்த  கலவையான படமாக தான் ரசவாதி உருவாக்கியிருக்கிறது.. இதில் அர்ஜுன்தாஸ் டாக்டராக நடிக்கிறார்.

அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட ஐந்தாறு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்கள் தான் கதை. சித்தமருத்துவராக அர்ஜுன் தாஸ் வந்தாலும் சித்த மருத்துவம் பற்றிய  கதையாக இது அமைக் கப்படவில்லை. இந்த கதாபாத் திற்கு அர்ஜுன்தாஸ் பொருத்த மாக இருந்ததால் அவரை தேர்வு செய்தேன். அவர் உள்ளிட்ட அனைவருமே எதிர்பார்த்த நடிப்பை வெளியிட்டு இரக்கின்ற னர்.

கொடைக்கானல் பின்னணியில் இதன் பெரும்பகுதி  படபிடிப்பு நடந்துள்ளது. மதுரை, பழனி, கடலூர் போன்ற  இடங்களிலும். காட்சிகள் படமாக்கி உள்ளது.  ஏற்கனவே கொடைக்கானலில் நான் வேறு படத்திற்கு சென்ற போது அங்கு உதித்த கதை தான் ரசவாதி.

வித்தியாசமான கதைகளை எழுத வேண்டும் என்று நான் மெனக் கெட்டு எழுyதுவதில்லை ஆனால் எனக்கு தோன்றும் கதைகள் அதுபோன்ற பாணியிலேயே அமைகிறது அந்த வகையில் ரசவாதியும் ஒரு மாறுபட்ட படைப்பாக தான் ரசிகர்களுக்கு இருக்கும்.. மௌனகுரு, மகாமுனி படங்களுக்கு எப்படி ரசிகர்கள்  வரவேற்பு தந்தார்களோ அந்த வரவேற்பை ரசவாதி படத்திற்கும் தருவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை ஏனென்றால் இது போன்ற படங்களுக்கு  தனி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடித்திருக் கிறார்கள் என்பதை வெளியிட்டால் அது கதையே தற்போது வெளி யிட்டதாக ஆகவிடும்  ஆகவேதான் அது பற்றி குறைவாக கூறியி ருக்கிறேன்.

மே 10ம் தேதி ரசவாதி திரைக்கு வருகிறது அதே நாளில் வேறு சில படங்கள் வெளியானாலும் என்னுடைய படத்திற்கு தனி ரசிகர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் இப்படம் வெளியாகிறது .

இப்படத்திற்கு தமன் இசைய மைக்கிறார். அவருடன் பணியாற் றும் போது எனக்கு ஒரு நல்ல இலகுவான பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. காட்சிக்கு ஏற்ற இசையை பாடலை அவரிடம் இருந்து என்னால் கேட்டு பெற முடிகிறது.

அதேபோல் ஒளிப்பதிவாளர் மற்றும் மற்ற டெக்னீஷ்களும் தங்கள் பணிகளை செவ்வனே சிறப்பாக செய்திருக்கிறார்கள். இப்படத்திற்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் நல்ல படங்கள் வருகிறது தமிழில் அதுபோல் வருவதில்லையே என்கிறார்கள்  அப்படி அல்ல மஞ்சுமல்  பாய்ஸ் பிரேமலு என இரண்டு மலையாள  படங்கள்  சமீபத்தில் வந்தன தமிழிலும்  நிறைய நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின் றன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இவ்வாறு இயக்குனர் சாந்தகுமார் கூறினார்.

 

Related posts

யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர். அமீன் இணைந்து பாடிய நபிகளை போற்றும் தனிப் பாடல்

Jai Chandran

VELS Film Producing Dhanush Starring D54

Jai Chandran

தமிழகம்: ஏப். 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend