தமிழகம்: ஏப். 30 வரை
ஊரடங்கு நீட்டிப்பு..
முதல்வர் அறிவிப்பு..
சென்னை ஏப் :
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்ப டுத்தும் வகையில், தமிழ் நாட்டில், கடந்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் மத்திய அரசு அதை ஏப். 15 காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப் பட்டு வருவதன் காரணமாக தமிழ் நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட் டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங் கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை யும், காணொலிக் காட்சி மூலமாக ஏப்ரல் 11 அன்று முதல்வர்களுடன் பிரதமர் விவாதித்தார்.
இந்த கலந்தாய்வின்போது, தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக் கைகளும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என எடுத்து ரைத்ததுடன், ஏப்.30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். மற்ற முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரதமரின் கலந்தாய்வுக் கூட்ட நடவடிக் கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்து ரைகளின்படியும், மாநிலத்தில் ஊரடங் கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டும், ஏப். 11 அன்று நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் படுகிறது.
இவ்வாறு முதல்வர் கூறி உள்ளார்.
#TN CM: Lockdown set to be extended till April 30