Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அண்ணாத்த ( பட விமர்சனம்)

படம்: அண்ணாத்த
நடிப்பு: ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, ஜெகபதிபாபு,
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு:வெற்றி பழனிசாமி
இயக்கம்: சிறுத்தை சிவா

ஊராட்சி மன்ற தலைவரான ரஜினி யாருக்கும் பயப்படாமல் அநியாயத்தை எதிர்க்கிறார்.தனது தங்கை கீர்த்தி சுரேஷ் மீது பாசத்தை பொழிகிறார். அதேபோல் கீர்த்தி சுரேஷும் அண்ணன் மீது அன்பை மழையாக பொழிகிறார். தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ரஜினி மாப்பிள்ளை தேடுகிறார். மாப்பிளையை பார்த்து முடிவு செய்யும்போது தனது காதலனுடன் தங்கை வீட்டைவிட்டு ஓடிவிடுகி றார்.மனம் ஒடிந்துபோகும் ரஜினி தங்கை எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய புறப்படுகிறார். கொல் கத்தாவில் தங்கை வறுமையில் வாடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது தங்கை இந்த நிலைக்கு ஆளானது ஏன்? அவரை எப்படி மீட்கிறார்? தங்கையை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களுக்கு எப்படி பதிலடி தருகிறார் என்பது கிளைமாக்ஸ்.
அண்ணாத்த படம் ரஜினி என்ற சொல்லில் நிறுத்தி வைக்கப்படு கிறது.பலரும் சீனுக்குசீன் வந்து சென்றாலும் எல்லாவற்றையும் மிஞ்சி படத்தை தலைமேல் சுமக்க வேண்டிய பெரிய வேலையை ரஜினிக்கு தந்திருக்கிறார் இயக்குனர் சிவா.
பாட்ஷாவுக்கு பிறகு இன்னொரு பாட்ஷா வரவில்லை. ஆனால் தாய் செண்டிமெண்ட், குடும்ப செண்டி மெண்ட், தந்தை செண்டிமெண்ட், இன செண்டி மெண்ட் என பலவித கதைக்களங்களில் ரஜினி நடித்தி ருக்கிறார். அண்ணாத்த படம் ஜனரஞ்சகமான தங்கை செண்டி மெண்ட் கதையாக இருந்தாலும் அதில் ரஜினி ரசிகர்களுக்கு தேவையான ஆக்‌ஷன் காமெடி கலந்து காட்சிகளுக்கு சுவை ஏற்றியிருக்கிறார்கள்.
இந்த வயதில் என்னமாய் நடனம் ஆடுகிறார், சுறுசுறுப்பு காட்டுகிறார் என்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகிறார் ரஜினி.துள்ளி ஓடி வருவதும்,ஆக்ரோஷம் கொப்பளிக்க மோதுவதுமாக அந்தர் செய்திருக் கிறார்.
முதல்பாதியில் ரசிகர்களை குதுகலப் படுத்தும் கலகலப்பையும். இரண் டாம் பாதியில் அவர்களை அரங்கம் அதிர ஆரவாரம் செய்ய வைக்கும் சண்டை காட்சிகளையும் தர ரஜினி தவறவில்லை.
ஏற்கனவே கதை லீக் ஆனதில் சொல்லப்பட்டது போல் மீனாவும், குஷ்புவும் ரஜினியின் முறைப்பெண் ணாக வந்து பழைய நினைப்பில் பளபளப்பை காட்டி இருக்கிறார்கள்.
வழக்கறிஞராக நயன்தாரா ரஜினிக்கு ஏற்ற ஜோடியாக பொருந்தம் காட்டியிருக்கிறார்
கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக அழுத்தமான வேடம் ஏற்றிருக்கிறார். அண்ணன் மீது அதீத பாசம் காட்டும் தங்கை கீர்த்தி அவரை ஏமாற்றிவிட்டு காதலனுடன் ஓடி விட்டார் என்ற இடம்தான் இடிக்கிறது.
ரஜினியின் அறிவுரை கேட்டு திருந்தும் பிரகாஷ்ராஜ், வில்லத்தனத்தை அசராமல் செய்திருக்கும் ஜெகபதி பாபு,அபிமன்யு சிங் ஆக்‌ஷன் காட்சி களுக்கு வித்திட்டிருக்கின்றனர். ரஜினியின் உதவியாளராக வரும் சூரி சில சமயம் சிரிக்க வைக்கிறார், சில சமயம் சூப்பர் ஸ்டாருக்கு பில்டப் ஏற்றி அப்ளாஸில் அரங்கை அலற வைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் கலாந்தி மாறன் தயாரிப்பில் தீபாவளிக்கு குடும்பத் துடன் கொண்டாட ஒரு படமாக அண்ணாத்த உருவாகி இருக்கிறது. ரசிகர்களையும் பெண்களையும் ஈர்க்கும் வகையில் கதையை டிசைன் செய்திருக் கிறார் இயக்குனர் சிவா.
ரஜினிபடமென்றால் பாடல்கள் ஹிட் ரகம். அந்த ரகத்தை தனது ராகத்தால் தவறாமல் தந்திருக்கிறார் டி.இமான். மருதாணி பாடல் நாவில் ஒட்டிக்கொள்கிறது.
வெற்றிபழனிசாமி ஒளிப்பதிவு நிறைவு.

அண்ணாத்த – தீபாவளிக்கு வெடித்திருக்கும் ரஜினி வெடி.

Related posts

துஷ்யந்த் நடிக்கும் ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர் டிரெயிலர் வெளியீடு’

Jai Chandran

பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்: விஷால்.குமுறல்

Jai Chandran

மின்னல் முரளி பட போனஸ் போஸ்டர் வெளியிட்ட நெட் பிளிக்ஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend