Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எனிமி (பட விமர்சனம்)

படம்: எனிமி
நடிப்பு: விஷால்,ஆர்யா, பிரகாஷ்ராஜ்,கருணாகரன், தம்பி ராமையா,மிர்னாளினி, மாளவிகா
தயாரிப்பு:எஸ்.வினோத்குமார்
இசை:தமன்.எஸ்.
பின்னணி இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்
இயக்கம்: ஆனந்த் சங்கர்

ரிடையர்டு போலீஸ் அதிகாரி மகன் ராஜீவ் (ஆர்யா) தன் தந்தையிடம் சிறுவயதிலேயே பல்வேறு திறமைகளுக்கான பயிற்சி பெறுகிறான். பக்கத்து வீட்டிலிருக்கும் மளிகை கடைக்காரர் மகன் சோழனுக்கும் (விஷால்) அவனைப்போல் பயிற்சி பெற ஆசை. அவனுக்கும் போலீஸ் அதிகாரி பயிற்சி தருகிறார். ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரியை யாரோ கொலை செய்துவிட சிறுவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கின்றனர். சோழனின் தந்தை பயந்து மகனை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் பறந்து விடுகிறார். அங்கும் போய் சூப்பர் மார்க்கெட் வைத்து பிழைப்பு  நடத்துகிறார். மகன் சோழன் வளர்ந்து ஆளான பிறகும் தந்தையுடனே கடையை கவனித்துக்கொள்கிறான். ஆனால் தந்தைக்கே தெரியாமல் வெளியில் பல ரிஸ்க்கான காரியங்களில் தலையிட்டு நல்லது செய்கிறான். இந்நிலையில் கேஸ் சிலிண்டர் குடோன் வெடிக்க அதில் பல தமிழ் இளைஞர்கள் சாகின்றனர். இது விபத்தல்ல யாரோ திட்டமிட்டு நடத்திய செயல் என சோழன் கண்டு பிடிக்கிறான். அப்போதுதான் இந்தியாவிலிருந்து வரும் பெண் மந்திரியை கொல்வதற்கு ராஜீவ் போட்ட திட்டம் என்பது தெரிகிறது. அந்த சதியிலிருந்து மந்திரியை சோழன் காப்பாற்றுகிறான். தனது திட்டத்தை தோற்கடித்த சோழனை பழி வாங்க முடிவு செய்கிறான் ராஜீவ். அடுத்து இருவருக்கும் நடக்கும் கீறி, பாம்பு மோதலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை அதிரடி ஆக்‌ஷன் கிளைமாக்ஸுடன் படம் விளக்குகிறது.

விஷாலுக்கும் சரி, ஆர்யாவக்கும் சரி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது கைவந்த கலை. அதை முழுமையாக இப்படத் தில் இருவரும் பயன்படுத்தி இருக்கி றார்கள்.
சிங்கபூரில் சீன கம்பெனியிடம் பாஸ்போட்டை பறிகொடுத்து பரிதவிக்கும் தமிழ் இளைஞர்களுக்கு பாஸ் போட்டை மீட்டுக்கொடுத்து ஆரவாரத்துடன் என்ட்ரி தருகிறார் விஷால்.
அடுத்துடுத்து இடைவெளியில்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளும் ஜெட் வேகத்தில் அரங்கேறுகிறது. மத்திய மந்திரி மாளவிகாவை கொல்ல ஆர்யா போடும் ஹேக்கிங்  சதி திட்டத்தை எப்படியோ கண்டறிந்து அதை முறியடிக்க விஷால் எடுக்கும் ரிஸ்க் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதுவரை தனது திட்டத்தில் தோல்வியே அடையாத ஆர்யாவுக்கு தனது திட்டத்தை முறியடித்தது தனது சிறு வயது நண்பன் விஷால்தான் என்பது தெரிந்ததும் அவருடன் அடுத்தடுத்து சவால்விட்டு மோத தயாரகும்போது காட்சிகள் இறக்கை கட்டிக்கொள்கின்றன.
எவ்வளவு ரகசியமாக ஆர்யா திட்டம் போட்டாலும் அதை சாமர்த்தியமாக கண்டுபிடித்து முறியடிக்கும் விஷால் என இருவருக்குமான போட்டி இருவரையும் நிஜ எனிமிகள்போலவே கண்முன் சித்தரிக்கிறது.
கிளைமாக்ஸில் அடுக்கு மாடியின் விளிம்பில் விஷால், ஆர்யா மோதிக் கொள்ளும் காட்சி படத்துக்கு ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. இரண்டு ஹீரோக்கள் மோதிக் கொள்ளும்போது யார் யாருக்கு விட்டுக் கொடுப்பது என்ற சிக்கல் எழும் அந்த சிக்கலை இயக்குனர் பக்குவமாக கையாண்டு இருவருக்கும் சம வாய்ப்புகளை அளித்துள்ளார்.

விஷாலின் காதலியாக வரும் மிருணாளினி கொஞ்சம் காதல், ,2 டூயட் என தலைகாட்டி உள்ளார். கருணாகரன் அவ்வப்போது காமெடி பஞ்ச் சொல்லி ரிலாக்ஸ் தருகிறார்.
ரிஸ்க் ராமலிங்கமாக மளிகை கடைக்காரர் வேடம் ஏற்றிருக்கும் தம்பி ராமையா எந்த வம்பு தும்பிலும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தாலும் அவரை தேடி வம்பு, தும்பு வந்து சேர்ந்து அவரை நிலைகுலைய வைப்பது செண்டிமெண்ட்  ஸெக்மெண்ட்.
சில காட்சிகளே வந்தாலும் ஓபனிங் பேட்ஸ்மேன்போல் ஹீரோக்களின் மோதலுக்கு அடித்தளம் போட்டு விட்டு செல்கிறார் பிரகாஷ்ராஜ்.

இயக்குனர் ஆனந்த் சங்கர் ஹாலிவுட் தரத்துக்கு படத்தை இயக்க அதற்கு சற்றும் தயங்காமல் தாராள செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் வினோத்குமார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தரம் குறையாமல் காட்சிகளை படமாக்கி இருக்கிறார். எஸ்.தமன் இசையில் பாடல்கள் சுழல, அதையும் மீறிக்கொண்டிருக்கிறார் காட்சில்ளை பின்னணி இசையில் பின்னியெடுத்திருக்கிறார்  சாம் சி.எஸ்.

எனிமி- காம்ப்ரமைஸ் இல்லாத ஆக்‌ஷன் விருந்து.

Related posts

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ பட ஆடியோ, டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சியில் அருண் விஜய்..

Jai Chandran

.Vijayantony ‘s KodiyilOruvan Trailer Hits an Amazing 3 Million+ views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend