கார்த்தி நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர். விவேக் மெர்வின் இசை அமைக் கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் மூலம் ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். நெப்போலியன், லால், யோகிபாபு, கேஜிஎஃப் ராமசந்திர ராஜூ, நவாப் ஷா, சிங்கம்புலி, பிரின்ஸ், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கியமாக 100 ரவுடிகளாக ஸ்டண்ட் நடிகர்கள் நடித்துள்ளனர். விவேகா, தனிக்கொடி பாடல்கள் எழுதி உள்ளனர். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.
சுல்தான் படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
முன்னதாக இப்படக் குழுவினர் ரிலீஸுக்கு முந்தைய விழா கொண்டாடினார்கள். பத்திரிகை, மீடியாகள் முன்னிலையில் நடந்த விழாவில் படக் குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:
கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொருவரின் தேவை எவ்வளவு குறைவானது என்பது தெரிந்தது. சொந்த பந்தங்களுடன் சேர்ந்து இருப்பதன் சந்தோஷம் உணர முடிந்தது.
மீண்டும் சினிமா எப்படி இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் எழ ஆரம்பித்து விட்டது. சினிமா என்ற ஒன்று மட்டும்தான் வயது வித்தியா சம் இல்லாமல், பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இணைந்து பணியாற்றும் இடமாக இருக்கிறது. யாருக்காக இதை உருவாக்குகிறோம் என்றால் மறுபடியும் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்குமானதாக உருவாக்குவதாக இருக்கிறது.
சுல்தான் படத்தின் ஒன்லைன் கேட்டதுமே எனக்கு பிடித்து விட்டது. மற்றவர்களிடம் கதை கேட்கும்போது முழு ஸ்கிரிப்ட்டும் சொல்ல கேட் பேன் அல்லது ஸ்கிர்ப்ட் கொடுத்துவிட்டு போங்கள் படித்துவிட்டு சொல்கிறேன் என்பேன். அதிலேயே அவர்கள் தெறித்து ஓடிவிடு வார்கள். ஆனால் 100 ரவுடிகள் அவர்களை கட்டுப்படுத்தும் வன்முறையே விரும்பாத ஒரு ஹீரோ கையில், பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்று பாக்யராஜ் கண்ணன் கூறியதும் அதில் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது. 20 நிமிடம்தான் கதை கேட்டேன் உடனே நடிக்கிறேன் என்று கூறிவிட் டேன். அந்தளவுக்கு அதில் கதாபாத்திரங்கள், நான் ஸ்கிர்ப்ட் கேட்டு 20 நிமிடத்தில் ஒப்புக்கொண்ட படம் இதுதான். எல்லா கதாப்பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதை. இப்படியொரு கதை யோசித் ததே பெரிய விஷயம். கதை கேட்கும்போது ரியாக்டே செய்யக் கூடாது என்று முடிவோடு இருந்தபோதும் இந்த கதை ரியாக்ட் செய்ய வைத்தது. அதற்கு காரணம் கதையின் வலுதான்.
ஒரு நல்ல படத் துக்கு நடிகர்கள் முக்கியம். அந்த வகையில் இந்த படத்தில் ஆர்ட்டிஸ்ட்கள் அவ்வளவு நன்றாக அமைந்தார்கள்.
நெப்போலியன், லால், கேஜிஎஃப் ராமசந்திர ராஜு, யோகிபாபு, சிங்கம்புலி. சென்ட்ராயன், பொன் வண்ணன், மயில்சாமி இப்படி நிறையபேர் இருக்கிறார்கள். ஆக்ஷன் படத்துக்கு வில்லன் மிக முக்கியம் அதற்கேற்ப கே ஜி எஃப் ராம சந்திரராஜூ கிடைத்தார். அவருக்கு அறிமுக காட்சியெல்லாம் இருந்தது. ஆனால் அதை யெல்லாம் தூக்கிபோட்டு விட்டார்கள். அவர் வந்த நின்றாலே அவ்வளவு மிரட்ட லாக இருக்கும். லால் சார் நடித்திருக்கிறார். கட்டப்பா மாதிரி ஒரு கதாபாத்திரம். எந்த ரோல் கிடைத்தாலும் அதை செய்பவர். யோகிபாபுவை எவ்வளவு திறமையானவர் என்பது பழகியபோது தெரிந்தது. ஆளை பார்த்து எடைபோடக்கூடாது என்பதை அவரை பார்த்துத் தான் தெரிந்துக் கொண்டேன். ஒரு வார்த்தை சொன்னால் போதும் 100 கவுண்டர் கொடுப்பார்.
இந்தபடத்தில் 100 பேர் சுல்தான் பாய்ஸ்களாக நடித்தி ருக்கின்றனர். அவ்வளவு பேரையும் நடிக்கவைப்பது என்பது பெரிய வேலை அவர்கள் எல்லோரையும் இயக்குனர் நடிக்க வைத்திருக் கிறார் இயக்குனர்.
நெப்போலியன் சார் எனது தந்தையாக நடித்திருக்கிறார். அவர் எங்களுடன் உள்ள நட்புக்காகத்தான் வந்து நடித்துக்கொடுத்தார். சாதாரண ஒரு மேனேஜராக இருந்து சென்ட்ரல் மினிஸ்டர் அளவுக்கு உயர்ந்தவர். அவ்வளவுக்கும் காரணம் அவரது கடுமையான உழைப்பு . சுல்தான் படத்தின் பாடல்கள் அவ்வளவு நன்றாக இருக்கிறது ஒரு ஆல்பமே பட பாடலாக கொடுத்திருக்கி றார்கள் விவேக் மெர்வின்.
ராஷ்மிகா… கிரஷ்.. ஷூட் டிங்கில் நான் ஷாட்டுக்கு போகும்போது யாராவது டிஸ்டர்ப் பண்ணால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனால் கேமிராவுக்கு பின்னால் நின்றுக்கொண்டு என்னை அவ்வளவு கலாட்டா செய் வார் ராஷ்மிகா. அவரை தமிழிக்கு வரவேற்கிறேன். கண் அசைவிலேயே மிரட்டி நடித்துக்கொண்டிருந்தார். அவர் ஃபர்ஸ்ட் டைம் சேற்றில் இறக்கி, மாட்டு வண்டி ஓட்ட வைத்தும் டிராக்டர் ஓட்ட வைத்தும் இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கி றார்கள் இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று நினைக்கவே இல்லை என்றார். நீ தானே ஆசைப்பட்டு கேட்ட… ஆனால் அவர் ரொம்ப புத்திசாலியும் கூட நம்மூரில் கிராமத்து பெண்ணகளாக நடிப்பவர்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுவார்கள் அந்த வகையில் அவர் தமிழில் ஒரு கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் அவரது ஆசைக்கு ஏற்ப அவரது வேடம் அமைந்திருக்கிறது. தமிழில் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசை மட்டுமல்ல அவரது தந்தையின் ஆசையும் ஆகும். இருவரும் தமிழ்படம்தான் பார்ப்பார்கள் என்று கூறுவார். தமிழில் நடிக்கிற சந்தோஷம் அவருக்கு மட்டுமல்ல அவரது தந்தைக்கும் மிகவும் மகிழ்ச்சி யான விஷயம்.
இப்படத்தின் எடிட்டர் ரூபன், ஸ்டண்ட் மாஸ்டர், நடன இயக்குனர், கேமராமேன் என் எல்லா தொழில்நுட்ப கலை ஞர்களும் அருமையானவர் களாக அமைந்தார்கள். சுல்தான் பெரிய நட்சத்திர கூட்டம் உள்ள பெரிய படம் தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.
கமர்ஷியல் படம் எடுப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஒவ்வொரு நொடியும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அது இந்த படத்தில் இருக்கிறது.
இவ்வாறு கார்த்தி பேசினார்.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் கூறும் போது, ’சுல்தான் படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. ரொம்ப பதற்றமாக இருக் கிறது. கார்த்தி சார் நடித்தி ருக்கிறார். ஒரு மெசேஜில் இந்த படம் ஆரம்பித்தது இப்போது ரிலீஸ் வரை வந்து நிற்கிறது. நான் காலேஜ் படிக்கும்போது பருத்திவீரன் பார்த்து இப்படியொரு ஹீரோ வந்திருக்கிறாரே தமிழுக்கு என்ற எண்ணினேன் அதன் பிறகு அவர் நடித்த எல்லா படத்தையும் ஓடியோடி பார்த்தேன். சிறுத்தை படம் பார்த்து பிரமித்தேன். முதல் படம் முடித்தவுடன் கார்த்திசாரை வைத்து படம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன் அவருக்காக சுல்தான் கதை உருவாக்கி னேன். ஸ்கிரீனில் அவர் நடிப்பை பார்த்து பிரமித்தேன். இவரிடம் சீன் சொல்வேன் ஆனால் இது பத்தாது இன்னும் வேணும் என்பார். அவருக்கு நடிக்க எவ்வளவு கொடுத்தாலும் அது போதாது இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பார். அவர் உதவி இயக்குனராக இருந்தவர் அதனால் நிறைய விஷயங்கள் தெரியும். ஒரு டைரக்டரிடம் வேலை பார்க்கும்போது எப்படி நிறைய கற்றுக்கொள் வோமோ அதுபோல் கார்த்திக் சாரிடம் நிறைய கற்றுக்கொண் டேன். அவரால்தான் இது இவ்வளவு பெரிய படமாக வந்திருக்கிறது. தயாரிப்பாளர் பிரபு இந்தபடத்துக்கு என்ன தேவையோ அதை செய்து தந்தார். பிரகாஷ்சாரும் அப்படித்தான். ராஷ்மிகா இந்த படத்தில் நடிக்கிறார் என்றது மே அவரது ரசிகர்கள் நிறைய மெசேஜ் அனுப்புவார்கள். இந்த சீன் வையுங்கள், இந்த வசனம் வையுங்கள் என்று மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார். இசை, பாடல்கள், ஸ்டண்ட் என எல்லாமே நன்றாக வந்திருக்கிறது’ என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு,’சுல்தான் ஸ்கிரிப்ட் கேட்டபோது 2 பாகம் கதை போல் இருந்தது அதற்கான பட்ஜெட் இல்லை. ஒரு பார்ட் தான் எடுக்க முடியும் என்ன செய்யலாம் என்ற எண்ணிய போது பாகுபலி ஸ்கிரிப்ட் ரைட்டர் விஜயயேந்திர பிரசாத்திடம் ஆலோசனை கேட்டோம். அவர் கதையில் எந்த பகுதி பிடித்திருக்கிறது என்று கேட்டு அதை அடிப்ப டையாக வைத்து மாற்றிக் கொடுத்தார். அது எல்லோ ருக்கும் பிடிக்கும் விதத்தில் வந்திருக்கிறது. பாக்கியராஜ் கண்ணன் அமைதியாக இருக் கிறார் அவர் எப்படி இந்தபடம் எடுப்பார் என்று யோசிதேன். ஆனால் அவர் எல்லோரையும் அமைதியாக டென்ஷனே இல்லாமல் இயக்கி முடித்தார். இந்த படம் பாகுபலி போன்ற பெரிய படம் என்று கூறலாம். பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகி இருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் சினிமாவில் நாம் மீண்டும் படம் எடுக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டி இருந்தது. அதற்கு நம்பிக்கை கொடுத்தது மாஸ்டர் படம்தான். இந்தியன் பிலிம் இன்டஸ்ட்ரிகே மீண்டும் மக்கள் தியேட்ட ருக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்தது மாஸ்டர் படம். சுல்தான் படம் ஒடிடியில் வெளியிட்ட பெரிய விலைக்கு கேட்டார்கள் ஆனால் இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்பதால் அதை விளக்கிய போது அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். வரும் ஏப்ரல் 2ம் தேதி திரைக்கு வருகிறது. குடும்பத்தோடு பார்க்கும் படமாக இது அமைந்திருக்கிறது. கோவிட் கட்டுப்பாடுகளை கடை பிடித்து தியேட்டருக்கு வந்த படம் பாருங்கள்.
இந்த ஸ்கிர்ப்ட்டை கேள் என்று கார்த்தி அண்ணாதான் அனுப்பினார். அவரது அட்வைஸ் கேட்டுதான் ட்ரீம் வாரியர்ஸ் படங்கள் தயாரா கிறது. தரமான படங்களை இந்த நிறுவனம் தருகிறது என்றால் கார்த்தி அண்ணா வின் ஆலோசனை முக்கியம். ராஷ்மிகாவும் இதுபோன்ற ஒரு கதாபாத் திரம் வேண்டும் என்று எண்ணினார்கள் அதுபோல் அவருக்கு கிடைத்திருக்கிறது’ என்றார்.
நடிகை ராஷ்மிகா கூறும்போது,’நாம் தமிழுக்கு வந்துட்டேன் ரொம்ப மகிழ்ச் சியாக இருக்கிறது. கார்த்தி சிறந்த நடிகர் என்பது தெரியும் அவருடன் நடிக்க வேண்டும் என்ரதும் என்க்கு நடுக்கமாக இருந்தது. ஆனால் அவர் ஊக்கம் தந்தார். அவருக்கு என்னுடைய் ல்வ் ல்வ் ல்வ். இயக் குனர் பாக்கியராஜ் கண்ணன். எனக்கு பர்ஸ்ட் தமிழ் படத் தில் இவ்வளவு அழகாக வேடம் கொடுத்தத்துடன் அழகாக காட்டி இருக்கிறார் கள். என்னாலே ஸ்ட்ரெஸ் தாங்க முடியவில்லை. எல்லோருக்கும் ரொம்ப நன்றி. என்னோட டீமை நான் ரொம்ப காதலிக்கிறேன்,
நிகழ்ச்சியில் இசை அமைப்பாளார்கள் விவேக் மெர்வின், ஒளிப்ப திவாளர் சத்யா சூரியன், எடிட்டர் ரூபன், பாடலா சிரியர்கள் விவேகா, தனிக் கொடி, நடிகர்கள் சென்ட்ராயன், ராம்சந்திர ராஜூ,பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அனைவரையும் பி ஆர் ஒ ஜான்சன் வரவேற்றார்.