Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யூ டர்ன் இயக்குனர் இயக்கத்தில் அமலா பால்

நட்சத்திர வெளிச்சம் எப்போதும் அவரை விட்டு விலகியதே இல்லை. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாப்பாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுதந்துள்ளது. நேர்த்தியான, தரமான கதைகள், கனமான கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் கொண்டாடும் கதாப்பாத்திரங்களை தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் கன்னடத்தில் “யூ டர்ன்” ( U Turn) படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே ( Kudi yedamaithe ) வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது. இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இது மற்ற திரைப்படங்கள், தொடர்கள் போல வழக்கமான ஹீரோ ஹீரோயின் கதாப்பாத்திரங்கள் அல்ல. இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது. இது தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் Netflix ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் “கடாவர்” (cadaver) படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த படங்கள், தொடர்கள் தவிர அமலாபால் Jio Studios & Vishesh Films நிறுவன தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

Related posts

vijayantony ‘s KodiyilOruvan trailer crosses 2.5 Million views

Jai Chandran

டெல்லியில் அனுமதி மறுத்த ஊர்திகள் தமிழகத்தில் காட்சிபடுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

Jai Chandran

7 G (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend