Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜாக்கி சானின் “வேன்கார்ட் ” டிசம்பர் 25ல் ரிலீஸ்..

அதிரடி ஆக்‌ஷன் களத்தில் மீண்டும் மிளிர வருகிறார் ‘அதிரடி மன்னன்’ ஜாக்கி சான். ஸ்டான்லி டோங் இயக்கத்தில், ஜாக்கி சான் நடிப்பில் வரும் வேன்கார்டு (VANGUARD) படத்தினை டிசம்பர் 25-ல் துணை கண்டம் முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழிகளில் ரிலீஸாகிறது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் மற்றும் இண்டோ ஓவர்சீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இத்திரைப்படத்தில், ஜாக்கி சான் படங்களுக்கே உரித்தான அத்தனை அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக தெவிட்டாத ஆக்‌ஷன் காட்சிகள். கூடவே, ஜாக்கி சான் பாணி நகைச்சுவையும் பிண்ணிப் பிணைந்திருக்கும். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் குழந்தைப்பருவத்தில் தொலைக்காட்சிகளில் ‘அதிரடித் திருவிழா’ படத்தைப் பார்த்து ரசித்த நினைவுகளைத் தட்டி எழுப்பும். இந்த கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் வெள்ளித்திரையில் ஜாக்கி சானை காண ஆயத்தமாவோம்.
வேன்கார்டு திரைப்படம் முழுநீள ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படம். உலகம் முழுவதும் இருக்கும் மிகப்பெரிய தொழில்துறை ஜாம்பவான்களை கூலிப்படைகளிடமிருந்து காக்கும் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்துகிறார் ஜாக்கி சான். வேன்கார்டு என்ற அந்த நிறுவனத்தின் அதிரடி ஆக்‌ஷன் நடவடிக்கைகளும், முக்கியப் பிரமுகர்கள் மீட்புப் பணியும் தான் படத்தின் கதை.
அதிரடிக்குப் பஞ்சமில்லாத இத்தகைய கதைக்களத்தில் ஜாக்கி சான், 66 வயதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிகத் துல்லியமாக தெறிக்கவிட்டிருக்கிறார். ஜாக்கியின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டியிருக்கும் என்று படக்குழு சவால் விடுகிறது.
ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுப்பதற்கு ஜாக்கி சான் எப்போதும் அஞ்சியதில்லை. அப்படித்தான் வேன்கார்டு படப்பிடிப்பின்போதும் நதியைக் கடக்கும் காட்சியின்போது கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்குச் சென்று மீட்கப்பட்டிருக்கிறார் என்பதை படத்தின் அதிரடிக்கு சாட்சியாகச் சொல்கிறது.


நொடிக்கு நொடி அதிரடி என உருவாக்கப்பட்டுள்ள வேன்கார்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் 5 வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டது. அதிரடியை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயமாகப் பெரிய விருந்துதான், என அடித்துச் சொல்கிறது படக்குழு.
ஜாக்கியின் புதிய அவதாரம்..
இத்திரைப்படத்தில் ஜாக்கியை ஒரு புதிய பரிமாணத்தில் நீங்கள் காணலாம். ஆம், அதிரடி மன்னன் இப்படத்தில் ஒரு பாடகராக மிளிர்கிறார். ஆம்பிஷன் இஸ் மை ஹார்ட் (‘Ambition in my heart ‘) என்ற ஆல்பத்தைப் பாடியிருக்கிறார்.
இப்படத்தை ஸ்டேன்லி டோங் இயக்கியுள்ளார். ஜாக்கி – ஸ்டான்லி கூட்டணியில் இது 9-வது திரைப்படம். இவர்கள் கூட்டணியில் உருவான குங்ஃபூ யோகா (2017) வசூல் வேட்டை நடத்தியது. இந்த இணை போலீஸ் ஸ்டோரி 3: சூப்பர் காப் கொடுத்து ரசிகர்களை மிரளவைத்த கூட்டணி என்பது கூடுதல் தகவல்.

Related posts

TwoTwoTwo 2nd single from KaathuVaakulaRenduKaadhal !

Jai Chandran

விமல் நடிக்கும் ஹாரர் படம் ஒரே ஷாட்டில் படமாகிறது..

Jai Chandran

It’s a wrap for ‘DEJAVU

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend