Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

5 வருடத்துக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகும் ஜீவன்; 5 மொழியில் ’பாம்பாட்டம்’..

நான் அவன் இல்லை, திருட்டு பயலே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஜீவன். இவர் கடைசியாக கடந்தௌ 2015ம் ஆண்டு அதிபன் படத்தில் நடித்தார். அதன்பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். 5 வௌட இடைவெளிக்கு பிறகு பாம்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.
தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள் இவர்களுடன் இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கிறார். தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கிறது “ பாம்பாட்டம் “

இதன் ஒளிப்பதிவு பொறுப்பை இனியன் J ஹாரீஸ் ஏற்க. அம்ரிஷ் இசை அமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதுகின்றனர்.
எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். கலை – சி.பழனிவேல். ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன். நடனம் தினேஷ், சிவசங்கர். மக்கள் தொடர்பு மணவை புவன்.
இணை தயாரிப்பு பண்ணை A இளங்கோவன். தயாரிப்பு வி.பழனிவேல்
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் வி.சி. வடிவுடையான்

பாம்பாட்டம் படம் பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கி உள்ளேன். மிகப் பெரிய C.G நிறுவனம் ஒன்று இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிக பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.
அதிக பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளோம். படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் மொத்தம் 120 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.

Related posts

“800” திரைப்பட விமர்சனம்

Jai Chandran

அதர்வா முரளி, அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆகஷன் காட்சி

Jai Chandran

விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் பட ஷூட்டிங் நிறைவு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend