கொரோனா லாக்டவுன் தளர் வில் பல நடிகர். நடிகைகள் திருமணம் நடந்து முடிந்திருக் கிறது. நடிகை காஜல் அகர் வால் தனது பாய்ஃபிரண்டு கவுதம் கிட்ச்லுவை மணந்தார். வெற்றிவேல், இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து போன்ற பல படங்களில் நடித்த மியா ஜார்ஜ் கடந்த செப்டம்பர் மாதம் அஸ்வின் பிலிப்போஸ் என்ற தொழில் அதிபரை மணந்தார். மம்முட்டியுடன் ’மாமாங்கம்’ படத்தில் நடித்த பிரச்சி தெஹலான் ரோஹித் சர்சா என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மணந்தார். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகா தொழில் அதிபர் சைதன் யாவை மணந்தார். டோலிவுட் நடிகர் நிதின், ஷாலினி என்பவரையும். நடிகர் ராணா மிஹீகா என்பவரையும், நடிகர் ஆரவ் நடிகை ராஹில் என்பவரையும் மணந்தனர்.
கொரோனா ஊர்டங்கு தளர்வில் நடிகை ’கயல்; ஆனந்தி க்கும் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம் தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மச்சான் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், பின்னர் இரு வீட்டாரின் சம்மதம் பெற்று இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது..