Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கடந்த சனிக்கிழமை மாலை, கடுமையான சோர்வு மற்றும் மாரடைப்பு காரணமாக ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அவரது பேத்தி ஜனாய் போஸ்லே ட்வீட் மூலம் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் ஞாயிறு காலை அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார. அவரது மறைவு இந்திய திரையுலகினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களையும் சோகத்தில் அழுத்தி உள்ளது

இளையராஜாவுடன் ஆஷா போஸ்லே 

பாடகி ஆஷா போஸ்லே தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரம்பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய பாடல்கள் இன்றும்  செவிகளில் தேனாய் பாய்கிறது.. குறிப்பாக, ‘செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்'(அலைபாயுதே) , ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ (சந்திரமுகி), செண்பகமே செண்பகமே போன்ற பாடல்கள் என்றென்றும் மனதில் நிற்கக்கூடிய பாடல்களாக அமைந்துள்ளது.
சுமார் எழுபது ஆண்டுகளாக
தனது வசீகர குரலால் இந்தியத் திரையுலகையும் ரசிகர்களையும் கட்டிப்போட்டு இசை ஆட்சி நடத்தி வந்த ஆஷா போஸ்லேவின் மறைவு க திரையுலகம் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.
இன்று அவரது இறுதிச் சடங்கு மும்பையில் உள்ள சிவாஜி மயானத்தில் நடைபெற்றது
ஆஷா போஸ்லே தமிழ், இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி பாடியுள்ளார். அத்துடன் உலகிலேயே அதிக பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் சாதனை படைத்து சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பிடித்தது. மத்திய அரசின் உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ மற்றும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ தந்து கவனிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

“வேம்பு” படம் மே மாதம் வெளியீடு

Jai Chandran

Anbudan Ramesh’ is a hot-selling book at Chennai Book Fair

Jai Chandran

Kattalan First-Ever Dubbing & Release in Tamil and Kannada..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend