படம்: ஸ்ட்ரைக்கர்
நடிப்பு: ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயா
தயாரிப்பு: ஹென்றி டேவிட் ஐ ஆர், ஜஸ்டின் விஜய் ஆர்
இசை: விஜய் சித்தார்த்
ஒளிப்பதிவு: ஜே.எம்.ராப்ரி நாத்
இயக்கம்: எஸ். ஏ.பிரபு
பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்
மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு கார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜஸ்டின் விஜய்க்கு அமானுஷ்யங்கள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டிருக் கிறார். அதற்கான படிப்பில் சேர்கிறார். அவரை பேட்டி எடுக்க யூ ட்யூப் நிருபர் வித்யா வருகிறார். முதலில் ஜஸ்டின் சொல்வதை நம்பாமல் கிண்டல் செய்கிறார். பின்னர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் பேயை விரட்ட செல்கிறார் ஜஸ்டின். அங்கு வித்யாவும்.வருகிறார். விபத்தில் இறந்துபோன அந்த நபர் பேயாக.இருப்பதை ஜஸ்டின் கண்டு பிடிக்கிறார். அதை அழைத்து பேச ஓஜா போர்ட் வைத்து முயற்சிக்கிறார். அதன் பிறகு அந்த பேய் அங்கு வருகிறது. அடுத்து நடந்தது என்ன என்பதை திடீர் திருப்பதுடன் கிளைமாக்ஸ் சொல்கிறது.
பேயிடம் பேசலாம் என்று ஓஜா போர்ட் வைத்து ஜஸ்டின் விஜய் செய்யும் முயற்சிகள் சில முதலில் தோல்வியில் முடியும்போது அதை பார்க்க ஆவலாக இருந்த வித்யா சலிப்படைவதைப்போல் ரசிகர் களும் சலிப்படைகின்றனர்.
பின்னர் அடுக்கு மாடி குடியிருப் பில் ராஜேந்தர் என்பவரின் ஆன்மா. உலாவுவதாக வந்த தகவலை கேட்டு அதை விரட்டு வதற்கு.சகல பேய் விரட்டும் கருவிகளுடன் ஜஸ்டின் விஜய் சென்று ஆயத்தமாகும்போது திடீரென்று அங்கு வரும் வித்யா அவருடன் சேர்ந்து ஓஜா போர்ட் மூலம் பேயை அழைக்கும்போது லப் டப் அதிகரிக்கிறது. தீவிர முயற்சிக்கு பின் ராஜேந்தர் ஆவி வர அதன் பிறகு நடப்பதெல்லாம் திடீர் திருப்பங்களாக அமை கின்றன.இப்படிக்கூட நடக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு கிளைமாக்சை முடிப்பது அதிர்ச்சி. அந்த அதிர்ச்சிக்காக பல காட்சி களை பொறுமையாக சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ராஜேந்தர் பேயாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கஸ்தூரி அமானுஷ்ய பாடம் நடத்தும் ஆசிரியையாக நடித்திருக் கிறார். பேய் மற்றும் ஆன்மா பற்றி அவர் தரும் விளக்கங்கள் ஆர்வத்தை தூண்டுகிறது. அவர் சொல்வதை கேட்டு யாராவது தனியாக அமர்ந்து ஓஜா போர்ட் முன் பேயை அழைக்க.முயற்சி செய்து ஏடாகூடமாக வம்பில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பது நம் அட்வைஸ்.
ஹென்றி டேவிட் ஐ ஆர், ஜஸ்டின் விஜய் ஆர் தயாரித்திருக்கி றார்கள்.. விஜய் சித்தார்த் இசை பெரிதாக பயமுறுத்தவில்லை
ஜே.எம்.ராப்ரி நாத் டார்க் ரூம் காட்சிகள் அச்சமூட்டுகிறது.
இயக்குனர் எஸ். ஏ.பிரபு பாதிவரை விளக்கம் சொல்லியே காட்சி களை நகர்த்துவதால் ஆர்வம் குறைகிறது. கிளைமாக்ஸ் நெருக்கத்தில் நடக்கும் அமானுஷ்ய ஆச்சர்யம் இப்படி கூட நடக்குமா என்ற கேள்வியை ஊசலாட வைக்கிறது.
ஸ்டிரைக்கர் – பேயுடன் பேச வழிகள்.