நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்குவதாக அறிவித்தார் நடிகர் மன்சூர் அலிகான். இன்னும் முறையான அங்கீகாரம் கிடைக்காததால், சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்க முடிவு செய்தார். இதையடுத்து தொண்டாமுத்தூர் தொகுதியில்வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொகுதியில் கடந்த சில தினங்களாக தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது.’ நான் ஒவ்வொருமுறையும் தேர்தலில் நிற்பது வழக்கம். கடந்த முறை நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டேன் இம்முறை தனிகட்சி தொடங்கினேன். அது பதிவாகாததால் சுயேட்சையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். ஆனால் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் ஒட்டை பிரிப்பதற்காக நிற்கிறீர்களா? எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். நான் அப்படிப்பட்டவன் இல்லை. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என் மக்களை அடகு வைக்க மாட்டேன். நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். பிரசாரம் செய்ய சிலர் அழைக்கின்றனர். அதற்கு செல்ல உள்ளேன்.
இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார். இந்த தகவலை ஆடியோ மூலம் தனது பிஆர் ஒ கோவிந்தராஜூக்கு அனுப்பி உள்ளார். அது வாட்ஸ் அப்பில் வெளியாகி இருக்கிறது.