Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹெய்ஸ்ட் திரில்லர் ஆதாரம் பட அதிரடி டீசர் !!

மேட்னி போக்ஸ் (MATINEE FOLKS) நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப் குமார், ஆப்ஷா மைதீன்
தயாரிப்பில், இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும் அதிரடி ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம் “ஆதாரம்”. இப்படத்தின் டீசரை திரை பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா மற்றும் இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

நம் கண் பார்க்கும் விசயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பாரத்த அனைத்தையும் சேமித்து வைக்கும் அது அழிந்து போகாது. இந்த கருவை மையமாக கொண்டு நகை கடை கொள்ளையின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “ஆதாரம்”.

திரை பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்தின் டீசர், சமூக வலை தளங்களில் ரசிகர்களிடன் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில், காதல் கமர்ஷியல் அம்சங்கள் கலந்து, அனைவ ரையும் கவரும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் இந்த டீசரை பகிர்ந்து கவனம் ஈர்க்கும் டீசர் வாழ்த்துக்கள் என பாராட்டியுள்ளார்.

இப்படத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேட்னி போக்ஸ்  நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன் தயாரித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் கவிதா இயக்கியுள்ளார். வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என். எஸ்..ராஜேஷ் குமார் & ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். டாய்ஸ். எம்.எடிட்டிங் பணிகள் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை பரணி அழகிரி, திருமுருகன் செய்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Related posts

Aditi Balan as ‘Kanmani’ in Karumegangal Kalaiginrana

Jai Chandran

Gautham Karthik and Cheran starring Anandham Vilayadum Veedu second schedule

Jai Chandran

மாடு பிடி வீரர்களுக்கு கோடிகளில் பரிசு: தங்கர் பச்சான் கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend