Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லெனின் பாண்டியன் (பட விமர்சனம் )

படம்: லெனின் பாண்டியன்

நடிப்பு: தர்ஷன் கணேசன் (அறிமுகம் ), கங்கை அமரன், ரோஜா, ஆடுகளம் நரேன்,  ஜார்ஜ் மரியன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன்,  சுப்பு பஞ்சு

தயாரிப்பு: செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு : ஏ எம் எட்வின் சாகே

இயக்கம்: டி டி பாலச்சந்திரன்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM)

கதை: பெரியவர் துரைராசு ( கங்கை அமரன் ) அவரது மனைவி சந்தனம் (ரோஜா ). மணல் மாபியா வழக்கு ஒன்றில்  துரைராசு முக்கிய சாட்சியாக இருப்பதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட. துப்பாக்கி ஏந்திய கான்ஸ்டபிள்  மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( தர்ஷன் கணேசன்) துரைராசுவுக்கு 24 மணி நேர பாதுகாவலராக   செல்கிறார்   அவரையும் மீறி துரைராசுவை கொல்ல ரவுடிகள் சூழும்போது பாண்டியன் அதனை தடுக்கிறார். ஒரு கட்டத்தில் பாண்டியனுக்கு பண  சிக்கல் ஏற்படுகிறது.  அதை பயன்படுத்தி அவரை விலைக்கு வாங்க ரவுடி கூட்டம் முயல்கிறது. அதற்கு அவர் சம்மதித்தாரா? துரைராசு கதி என்னவானது என்பதற்கு கிளைமாக்ஸ் சென்டிமென்ட்  பதில் சொல்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசாக திரையுலகத்திற்கு வந்திருக்கிறார் தர்ஷன் கணேசன்  (ராம்குமார் மகன்). அறிமுக படமென்றாலும்  முதலிலேயே நூறு பேரை தூக்கி அடித்து அதிரடி ஆக்சன் ஹீரோவாக களம் இறங்காமல் சிவாஜியின் வாரிசு என்பதை நிரூபிப்பது போல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தர்ஷன் அறிமுகமாகி இருப்பது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது.

படத்தில் நிறைய காட்சிகளில் அவரது நடிப்புக்கு சாட்சிகள் இருந்தாலும்  குறிப்பாக பாண்டி கோயிலுக்கு கங்கை அமரனை அழைத்துச் சென்று அவரை தனியாக விட்டு விட்டு திரும்பி வரும் தர்ஷன் வீடு செல்ல முடியாமல் நடுவீதியிலேயே  போவதா? வேண்டாமா என்ற  மனத் தவிப்புக்கு ஆளாகி இங்கும் அங்கும் நடப்பதும், கிளைமாக்சில் துப்பாக்கிக்கு வேலை கொடுத்து ஆக்ரோஷமான கோபத்திலிருந்து  தன்னை ஆசுவாசப்படுத்த அங்கிருக்கும்  நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு அமர்வதும் நடிகர் திலகத்தின் பிரதிபலிப்பு.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் கங்கை அமரன் முதன் முறையாக இப்படத்தில் துரைராசு என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உயிரோடு இருந்திருந்தால் இந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருப்பார் அவர் இல்லாத நிலையில் இந்த பாத்திரம் கங்கை அமரனை தேடி சென்றிருக்கிறது.. அவரும் தனது சின்ன சின்ன சேட்டைகள், அதிக பிரசங்கித்தனங்களை மூட்டை கட்டி விட்டு துரைராசு கதாபாத்திரத்திற்குள்  ஒடுங்கி அடங்கி எதார்த்தமாக நடித்திருப்பது  அவர் ஒரு அசல் கிராமத்துக்காரர் என்பதை உறுதி செய்கிறது.

கங்கை அமரன் மனைவியாக சந்தனம் கதாபாத்திரத்தில் ரோஜா நடித்திருக்கிறார். கவர்ச்சி நாயகியாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்த ரோஜா இந்த படத்தில் குணச்சித்திர பாத்திரமாக மாறி தனது கவர்ச்சி இமேஜை உடைத்து அம்மா இமேஜுக்குள்  தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறார்.

நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியன் தனது நியாயமான தீர்ப்பால் மனதில் இடம் பிடிக்கிறார். மேலும் நரேன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரும் ஏற்ற பாத்திரங்களை சிதைக்காமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.

சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் வழங்க செந்தில் அர்ஜுன் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

புதுமுக இயக்குனர் டி.டி. பாலச்சந்திரன்  முதல் படமென்றாலும் நடிகர் திலகத்தின் பேரன் என்பதற்காக தர்ஷனுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் தராமல் அவரிடம் நடிப்பை வாங்கியிருப்பது இயக்குனராக அவர் வெற்றி பெற்றிருப்பதுடன் நடிகராக தர்ஷனை வெற்றி பெற வைத்திருக்கிறார். இந்த உண்மை உணர்வு தான் படம் நேர்த்தியாக உருவாக்க கைகொடுத்திருக்கிறது.

பாத்திரங்கள் எவ்வளவுதான் நடித்தாலும்  வெடித்தாலும்  இசை இல்லாவிட்டால் எல்லாமே பாழாகியிருக்கும் என்பதை இசைஞானி இளையராஜாவின் இசை மட்டுமல்ல சில இடங்களில் அவர் இசைக்காமல் விட்ட அமைதியும் உணர்த்துகிறது.

ஏ எம் எட்வின் சாகே  கேமரா கிராமத்து காட்சியை மட்டும் அல்ல மண்வாசனையும் கேமரா மூலம் அள்ளி வீசுகிறது.

லெனின் பாண்டியன்  – மனசாட்சிக்கு பயந்தவன்.

Review By

K Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

Related posts

உசிலம்பட்டியில் டி இமான் பொங்கல் விழா

Jai Chandran

RRR New Release Date

Jai Chandran

நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend