Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அக்ஷய் குமாரின் அடுத்த அதிரடி ஆட்டம்

LK அக்ஷய் குமாரின் அடுத்த அதிரடி ஆட்டம்… கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்!

ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு களத்தில் அசத்தும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படம் இனிதே துவங்கியது!.

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் R. K. செல்வமணி, T. சிவா, G. தனஞ்செயன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி, விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் முன்னணி இயக்குநர் H. வினோத்த்தின்  உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். H.வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இயக்குநராக தனது புதிய பயணத்தை இப்படத்தின் மூலம் தொடங்குகிறார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி மேற்கொள்கிறார். இசையை ஹேஷம் அப்துல் வஹாப் அமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன். R கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஆர்த்தி நீலகிருஷ்ணன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P.S.ஹரிஹரன் கவனிக்கிறார். விளம்பர வடிவமைப்பை அம்பானி (ADFX) கவனிக்க, சண்டைக் காட்சிகளை ஆக்சன் சந்தோஷ் அமைக்கிறார். நிர்வாக தயாரிப்பாளராக மணிகண்டன், கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அருண் K பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. வெவ்வேறு களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், கிரைம் டிராமா ஜானரில் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகவுள்ளது.

‘சிறை’ படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்ற LK அக்ஷய் குமார், அதன்பிறகு ‘ராவடி’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக அந்தப் படத்தின் டீசர் மற்றும் புரமோஷன் வீடியோக்களில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் அவர் நடித்திருந்தது, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் அவரது அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

இப்போது ‘ராவடி’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தளத்தில், கிரைம் டிராமா கதைக்களத்தில் LK அக்ஷய்குமார் நடிக்கிறார். தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல், ஒவ்வொரு படத்திலும் புதிய கதைக்களத்தையும், வித்தியாசமான கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து வரும் அவரது பயணத்தில், இந்த புதிய திரைப்படமும் மற்றுமொரு வித்தியாசமான படைப்பாக அமையவுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரனின் இயக்கத்தில் உருவாகும் இப்படம், தொடக்க விழாவிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

M.S. Sripathy directorial First Look of “800

Jai Chandran

Dulquer Salmaan Much Awaited First Look of ‘I Am Game’..

Jai Chandran

சன்னிலியோன் இமேஜ் மாறும்? ப்ரியாமணி பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend