Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வாரண்ட் (வெப் சீரிஸ் விமர்சனம்)

 

படம் (வெப் சீரிஸ் ): வாரண்ட்

நடிப்பு: பிரசாந்த் பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், அம்ரிதா எம் வி, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா கௌசல்யா, வையாபுரி

தயாரிப்பு: பிரசாந்த் பாண்டிராஜ், பி.விஷால், ஆதிஸ்வர்,

இசை: சாம் சி எஸ்.

ஒளிப்பதிவு : ஏ ஆர் அசோக்குமார்

கதை, திரைக்கதை : பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன்

இயக்கம் : விக்னேஷ் நடராஜன்

வெளியீடு:ZEE5 Original Tamil

பி ஆர் ஓ : சதீஷ் (AIM )

கதை: ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் (பாலாஜி சக்திவேல்) தனது ஒரே மகன் கோட்டை கருப்பு சாமியை (பிரசாந்த் பாண்டிராஜ்) அரசு வேலையில் சேர வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதற்காக எல்லா தேர்வுகளையும் மகனை எழுத சொல்கிறார். ஆனால் எந்த தேர்விலும் கோட்டை தேர்ச்சி பெறாத நிலையில் அவரை போலீஸ் வேலையில் அவரது மாமா (காளி வெங்கட்) சேர்த்து விடுகிறார். போலீசில் கான்ஸ்டபிளாக இணைகிறார் கோட்டை. தொடக்கத்தில் அவரிடம் சிறு சிறு வேலைகள் தரப்படும் போது அதை சரிவர செய்யாமல் மெத்தனமாக இருக்கிறார். இதனால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். கோட்டைச்சாமி என்று இருந்த அவரது பேரை கிண்டலாக கொட்டை என்று அழைக்கின்றனர். இதில் அவமானப்படும கோட்டைச்சாமி அதிரடியாக ஒரு முடிவு எடுக்கிறார். அது என்ன? அவர் எடுத்த முடிவை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பதற்கு கிளைமாக்ஸ் கச்சிதமாக பதில் அளிக்கிறது.

விலங்கு வெப் சீரிஸ், மாமன் படம் ஆகிவற்றை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் வாரண்ட் வெப் சீரியஸ் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார் இப்படத்தின் கதை திரைக்கதையிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.

தொடக்க காட்சிகளில் அப்பா அம்மாவுக்கு செல்ல பிள்ளையாகவும் அதே அப்பாவி தனத்துடன் போலீசிலும் சேர்ந்து எதார்த்தமான நடிப்போடு பிரசாந்த் பாண்டிராஜ் கவர்கிறார்.

திருடனை பிடிக்க சென்ற இடத்தில் இவனை
நான் எப்படி பிடிப்பது என்று பயந்து நடுங்கி ஒரு வழியாக அவனை பிடிக்க உதவுவதும் பின்னர் அந்த திருடனை பொறுப்புடன் பிடித்துக் கொள்ளச் சொல்லி இன்னொரு போலீஸ்காரர் போன் செய்ய செல்லும் போது அந்த திருடன் தப்பித்து சென்றதும் பிரசாந்த் பாண்டியராஜன் என்ன செய்வது என்று தெரியாமல் கதறிக்கொண்டு விழும்போது ஒரு நிமிடம் என்ன ஆனது என்று தெரியாமல் எபிசோடு பார்ப்பவர்கள் திணறித்தான் போவார்கள்.

கோட்டைச்சாமி என்று பெயர் வைத்திருக்கும் பிரசாந்த் பாண்டியராஜை சக போலீஸ்காரர்கள் கொட்டை கொட்டை என்று அழைத்து கிண்டல் செய்வதும், இந்த வேலையே வேண்டாம் விட்டுவிட்டு செல்கிறேன் என்று முடிவு எடுக்கும் பிரசாந்த்திடம் அவரது தந்தை குத்துச்சண்டை வீரர் முகமது அலி வாழ்க்கை கதையை சொல்லி தைரியத்தை வழங்கும்போது லேசாக வெப் சீரிசியில் தீ பிடிக்கிறது.

அதன்பிறகு பிரசாந்த் பாண்டிராஜன் நடிப்பு வேறு பாதைக்கு செல்கிறது.

கோர்ட்டில் பெண் நீதிபதி முன் ஆஜராகும் பிரசாந்த் பாண்டிராஜ் தனது அப்பாவித்தனமான நடவடிக்கையால் இன்ஸ்பெக்டர் முதல் எஸ்பி வரை எல்லோரையும் ஒட்டுமொத்தமாக நீதிபதி முன் கைகட்டி நிற்க வைப்பது எதிர்பாராத ஷாக் மட்டுமல்ல , கலகலவென்று சிரிக்க வைக்கும் துடிப்பான நகைச்சுவை காட்சி..

இந்த காட்சிக்கு பிறகு பிரசாந்த் பாண்டிராஜ் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கிலியில் நடுங்குவதும் அவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு பிரசாந்த் பாண்டிராஜ் டிடெக்டிவ் வேலைகள் செய்வதெல்லாம் போலீஸ் படையில் சேரும் இளம் போலீஸ்காரர்களுக்கு படிப்பினை சொல்லித்தரும் காட்சிகள்.

வீடு புகுந்து கொள்ளையடிக்கும் திருடனை பிடிப்பதற்காக விபச்சார பொண்ணிடம் உதவி கேட்கும் பிரசாந்த் பாண்டிராஜ் அவரை அக்கா அக்கா என்று சொல்லி திருடனுக்கு வலை விரிப்பது, திருடனை பின் தொடர்வது என்று காட்சிகள் இறக்கை கட்டிக் கொள்கிறது .
பிரசாந்த், ஒரு ஊரையே லாரியில் கூட்டி வந்து கோர்ட்டில் ஆச்சரியப்படுத்தி கோர்ட் வளாகத்தை அல்லோகல்ல பட வைப்பது என எபிசோட் நீண்டு கொண்டே சென்றாலும் ஆர்வத்தையும் உடன் தூண்டிக்கொண்டே செல்கிறது.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ் தொடங்கி போலீசாக நடித்திருக்கும் அத்தனை பேரும் அசத்தலாக நடித்து நடித்து காட்சியோடு ஒன்றாக வைத்து விடுகிறார்கள்.

பிரசாந்த் பாண்டிராஜ் தந்தை பாலாஜி சக்திவேல் அவரது அம்மாவாக நடித்திருக்கும் பெண்மணியும் செண்டிமெண்ட் சீனில் கலங்க வைக்கின்றனர்.
மற்றும் கதாநாயகிகளாக நடித்திருப்பவர்களும் நிறைவு.

பிரசாந்த் பாண்டிராஜ், பி.விஷால், ஆதிஸ்வர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

சாம் சி எஸ். இசை காட்சிகளுக்கு உயிர் கொடுக்க ஏ ஆர் அசோக்குமார் கேமரா உருவம் கொடுத்திருக்கிறது.

இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கம்  ஏற்ற இறக்கங்களுடன் காட்சிகளை நகரத்துகிறது.
சில இடங்களில் வரும் அந்த கெட்ட வார்த்தைகள் கோபத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் குழந்தைகளும் வெப்சீரிசை பார்க்கும் என்பதால் அந்த வார்த்தைகளை மியூட் செய்தால் விறுவிறுப்பு குறையப்போவதில்லை.

ZEE5 Original Tamil ஓ டி டி தளம் வாரண்ட் வெப்சைரிசை வெளியிட்டிருக்கிறது.

வாரண்ட் – திகில், பரபரப்பு, மர்மம், கிரைம், த்ரில் செண்டிமெண்டுடன் கவர்கிறது.

Review By
K. Jayachandhiran
trendingcinemasnow.com

Related posts

இந்த கிரைம் தப்பில்ல ( பட விமர்சனம்)

Jai Chandran

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்

Jai Chandran

மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ் ஒ டி டி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend