Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா..

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்
திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது

இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன்,
தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்…

இவ்விழாவில்
திரு கங்கை அமரன் அவர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசும் பொழுது…அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு என்றும்… அருமையான சமூக உறவுகளை..ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார்..எங்கள் அண்ணா இசைஞானி யின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம்…எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம்… அப்படிப்பட்ட குருக்களு டன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது..

 

இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா?இல்லையா? என்பது தெரியவில்லை… முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலை யாக பாடுவோம்… இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம்..AI இல் பீட் (feed) பண்ணி பாடுகின்றோம்… அதற்கு நாம் எப்படி நம்மளை பெருமைபடுத்தி கொள்வது?…உண்மை யை சொல்ல வேண்டுமென்றால் Ai தொழில்நுட்பம் நம்மளை கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது… ஒரு தீம் ஐ AI இல் கொடு த்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது…. இதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது.. எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.. வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை.. 50 வருட வாழ்க்கையை இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள்… கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு… என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

Related posts

வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

‘Manidham’ First Tamil movie entirely shot in Puducherry

Jai Chandran

Vaikom Vijayalakshmi Gives Voice to ‘Mandavetti’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend