Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மீஷா (Meesha) (பட விமர்சனம்)

படம்: மீஷா (Meesha)

நடிப்பு : கதிர், ஜோ பேபி, ஹக்கீம் ஷா

தயாரிப்பு: சமீர்

இயக்கம்: எம்சி ஜோசப்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

 

கேரளாவில் கடற்கரை பகுதி காலனியில் வசிக்கும் கதிர் மற்றும் ஹக்கீம் நண்பர்கள். இவர்களுக்குள் ஜாதி பாகுபாடு இருந்தாலும் அதுபற்றி பொருட்படுத்தாமல் பழகுகின்றனர். அப்பகுதியில் பேக்டரி வருவதில்.கதிருக்கும், அரசியல் வாதிகளுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. கதிரை தீர்த்துக்கட்ட அரசியல்வாதி நினைக்கிறார். அந்த திட்டம் நிறைவேற்கிறதா என்பதற்கு எதார்த்தமாக பதில் அளிக்கிறது படம்.

முழுக்க .கேரளா பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள். மலையாள படம் எப்படி எதார்த்தமாக இருக்குமோ அப்படியே இந்த படமும் படமாகியிருக்கிறது.

கதிர்  காட்டிலாகா அதிகாரியாக வருகிறார். வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு கதிர், ஹக்கீம் உள்ளிட்ட 3 நண்பர்கள் காட்டுக்குள் சென்று செய்யும் சகுனி வேலைகள் கதையை நகர்த்தி செல்கிறது.

முழுக்க கேரளா காட்டுப்பகுதியில்தான் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜீப்பில் அமர்ந்து  கதாபாத்திரங்கள் காட்டுப்குதிக்குள் நுழையும்போது ரசிகர்களையும் உடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.

படத்தை எம்சி ஜோசப் இயக்கி உள்ளார். அரசியல் சூழ்ச்சி, நண்பர்கள் சதி, ஜாதி பிரிவினை என்று கதையை எதார்த்தமாக உருவாக்கியிருக்கிறார்.

மீஷா – அரசியல்,  துரோக நட்பு

By

ஜெயச்சந்திரன் கே

www.rendingcinemasnoe.com

 

Related posts

பவுடர் ஆகஸ்ட் 15ல் டிரைலர்

Jai Chandran

Doctor 5 million+ views and trending at Number1

Jai Chandran

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2ம் பாகம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend